மலேசியாவில் குட்டி கதை சொல்வாரா விஜய் | மகனுக்காக போன் போடும் அப்பா : சிறை படத்தில் நடக்கும் சுவாரஸ்யம் | ரஜினியின் மூன்று முகம் ரீ ரிலீஸ் ஆகுது : ஆர்.எம்.வீரப்பன் மகன் தகவல் | ஜனநாயகன் படத்தின் ஹிந்தி தலைப்பு 'ஜன் நேட்டா' | சிக்மா படத்தின் டீசர் எப்படி இருக்கு | 60 நாட்களில் நிறைவு பெற்ற கென் கருணாஸ் பட படப்பிடிப்பு | முதன்முறையாக இணையும் சிரஞ்சீவி மோகன்லால் கூட்டணி | பைக் சாகசம் செய்து வீடியோ வெளியிட்ட பார்வதி | ஜன., 7ல் பாக்யராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம் ; ரஜினி பங்கேற்கிறார் | கோல்கட்டாவில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சிறந்த நடிகர் விருது |

சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா அதையடுத்து அவரை வைத்து புறநாநூறு என்ற இன்னொரு படமும் இயக்க இருந்தார். ஆனால் கதையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த படத்தில் சூர்யா நடிக்க மறுத்துவிட்டார். இதனால் அதே கதையை சிவகார்த்திகேயனிடம் சொல்லி ஓகே செய்து தற்போது பராசக்தி என்ற பெயரில் அந்த படத்தை இயக்கியுள்ளார் சுதா.
சிவகார்த்திகேயனின் 25வது படமான இப்படத்தில் அவருடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். வருகிற பொங்கலை ஒட்டி ஜனவரி 14ம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது. இப்படத்தில் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வரும் நிலையில், பராசக்தி படத்தை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தை இயக்கப் போகிறார் சுதா. அது குறித்த கதையை அவரிடத்தில் சொல்லி அவர் ஓகே வாங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.