டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

இந்த வார ஓடிடி ரிலீஸில் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்கள் வெளிவரவுள்ளது. இந்த திரைப்படங்களும், ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை. இந்த வாரம் வரிசைக்கட்டும் படங்கள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.
தி கேர்ள் பிரெண்ட்
தெலுங்கு இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில், ராஷ்மிகா மந்தனா, அணு இமானுவேல் நடிப்பில் வெளிவந்துள்ள ரொமான்டிக் திரைப்படம்' தி கேர்ள் பிரெண்ட்'. இந்த திரைப்படம் தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியான நிலையில், நாளை(டிச.5ம்தேதி) நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ஸ்டீபன்
சைக்காலஜிக்கல் த்ரில்லர் கதையம்சத்தில் உருவாகியுள்ள திரைப்படம்'ஸ்டீபன்'. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நாளை(டிச.5ம் தேதி) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
குற்றம் புரிந்தவன்
நடிகர் பசுபதி, விதார்த் நடிப்பில் குற்றம் கதைக் களத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'குற்றம் புரிந்தவன்'. இந்த வெப் தொடர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நாளை( டிச.5ம் தேதி) சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
dies irae
மலையாள நடிகர் மோகன்லால் மகன் பிரணவ் மோகன்லால் நடிப்பில் வெளிவந்துள்ள த்ரில்லர் திரைப்படம்'dies irae'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படம் நாளை(டிச.5ம் தேதி) ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
Arasayyana Prema Prasanga
கன்னட மொழியில் வெளிவந்த காமெடி திரைப்படம் 'Arasayyana Prema Prasanga'. அப்பாவி இளைஞன் ஒருவன் காதலுக்காக ஏங்குவதும், அவனது ஆசை நிறைவேறியதா என்ற கோணத்தில் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும். இந்த திரைப்படம் நாளை(டிச.5ம் தேதி) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
தி கிரேட் ப்ரி வெட்டிங் ஷோ
தெலுங்கு மொழியில் வெளியான ரொமான்டிக் திரைப்படம் 'தி கிரேட் ப்ரி வெட்டிங் ஷோ'. கல்யாணத்திற்கு முன்பு போட்டோ எடுக்கும் போது நடைபெறும் நிகழ்வுகளை மையப்படுத்தி கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும். இந்த திரைப்படம் நாளை(டிச.5ம் தேதி) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.