டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

கடந்த சில வாரங்களாவே தமிழ் சினிமா டல் அடிக்கிறது. ஆண்பாவம் பொல்லாதது படத்துக்குபின் எந்த படமும் லாபம் ஈட்டவில்லை என்று கூறப்படுகிறது. நேற்று அங்கம்மாள், சாரா, சாவீ, கொஞ்ச நாள் பொறு தலைவா, நிர்வாகம் பொறுப்பல்ல, கேம் ஆப் லோன்ஸ், கண்ணி நகர், காவலன்(ரீ ரிலீஸ்) ஆகிய 8 படங்கள் ரிலீஸ் ஆகின. கோர்ட் தடை காரணமாக அகண்டா 2 ரிலீஸ் ஆகவில்லை. நேற்று ரிலீஸ் ஆன படங்களில் அங்கம்மாள் படத்திற்கு விமர்சன ரீதியாக பாராட்டுகள் கிடைத்தாலும் தியேட்டரில் பெரிய கூட்டம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இதில் பெரும்பாலான படங்கள் ஒன்றிரண்டு ஷோ மட்டுமே ஓடின.
கடந்த வாரமும் இதேபோல் ரிவால்வர் ரீட்டா, வெள்ளகுதிரை, ஒண்டிமுனியும் நல்ல பாடனும், ஐபிஎல், பிபி180, பிரைடே, அட்டகாசம், அஞ்சான், தேரே இஸ்க் மே உள்ளிட்ட 9 படங்கள் ரிலீஸ் ஆகின. அதிலும் எதுவும் ஓடவில்லை. அதற்கு முன்பு வந்த மாஸ்க், மிடில் கிளாஸ் உள்ளிட்ட படங்களும் தியேட்டர்காரர்களுக்கு, வினியோகஸ்தர்களுக்கு லாபத்தை சம்பாதித்து கொடுக்கவில்லை. ஆக, கடந்த சில வாரங்களாக மோசமான நிலையில் தமிழ் சினிமா இருக்கிறது.
வரும் வாரங்களில் கார்த்தி நடித்த வா வாத்தியார், விக்னேஷ் சிவனின் எல்ஐகே, அருண் விஜயின் ரெட்ட தல, விக்ரம் பிரபுவின் சிறை உள்ளிட்ட படங்கள் வர இருக்கின்றன. அத்துடன் இந்த ஆண்டு கணக்கு முடிகிறது. இதில் எத்தனை படங்கள் ஓடப்போகிறதோ? இந்த கடைசி வெற்றி படம் என்பது எதுவோ என தவிக்கிறார்கள் கோலிவுட்டில்