டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அதனை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஜப்பான், சீனா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வெளியாகி அவரது படங்களுக்கு என ரசிகர்களே அங்கே உருவாகி விட்டார்கள். பிரபாஸும் உலக அளவில் பிரபலமாகிவிட்டார். பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் ஒன்றிணைத்து மூன்றே முக்கால் மணி நேரம் ஓடும் விதமாக பாகுபலி தி எபிக் என்கிற பெயரில் புதிய இணைப்பு படம் கடந்த மாதம் வெளியானது.
இந்த நிலையில் ஜப்பானில் இந்த படம் வரும் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்காக நேரிலேயே ஜப்பான் சென்று அங்குள்ள ரசிகர்களுடன் இதன் சிறப்புக் காட்சியை பார்த்து ரசித்துள்ளார் பிரபாஸ். அங்கு அவர் பேசும்போது, “ஜப்பானிய ரசிகர்கள் நம் மீது மிகப்பெரிய அன்பு வைத்திருக்கிறார்கள் என்று பத்து வருடங்களுக்கு முன்பே பலர் என்னிடம் சொன்னார்கள். அதை நேரில் பார்க்கும் கனவு இன்று எனக்கு நனவாகியுள்ளது. நானும் இனி வருடம் தோறும் ஜப்பானுக்கு வந்து உங்களை சந்திக்க இருக்கிறேன்” என்று உற்சாகத்துடன் கூறியுள்ளார்.