டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கிர்த்தி ஷெட்டி, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛வா வாத்தியார்'. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வரும் டிச., 12ல் படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வா வாத்தியா பட நிகழ்ச்சியில் ஹீரோ கார்த்தி பேசியது "இந்த படத்தின் திரைக்கதை கொஞ்சம் வித்தியாசமானது. ஆனாலும் இயக்குனர் நலன் குமாரசாமி சிறப்பான திரைக்கதை அமைத்து இருக்கிறார். கோலிவுட்டில் அவருக்கு அவ்வளவு ரசிகர்கள். ஒன்பது ஆண்டுகளுக்குபின் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். எம்ஜிஆர் பெருமைகளை பேசிக்கொண்டே இருக்கலாம். ஒருவர் அவரை பார்க்க பல நாட்கள் காத்து இருந்து இருக்கிறார். எம்ஜிஆர் பார்வை அவர் மீது படவில்லை. அது குறித்து சிலர் விமர்சனம் செய்ய, நாம் கோயிலுக்கு போகிறோம், வேண்டுகிறோம். அந்த மாதிரி இதுவும் என அவர் சொல்லி இருக்கிறார்.
ஒருநாள் எம்ஜிஆர் பார்வை பட, கார் நின்று இருக்கிறது. அவர் அருகில் வந்த எம்ஜிஆர் கையில் பணக்கட்டை திணித்து ஏதாவது கடை வைத்து பிழைத்து கொள். ஆனால் பீடி சிகரெட் விற்காதே என சொல்லி இருக்கிறார். அவர் கெட் அப்பில் நடிக்க ரொம்பவே அக்கறை எடுத்தோம். தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டுதான் நடிப்பேன். அப்பாவும் நிறைய விஷயங்கள் சொல்லி கொடுத்தார். அப்பா, அவருடன் நடித்தபோது சண்டை காட்சியில் யாரையும் அடிக்காதே, அடிக்கிற மாதிரி நடி என சொல்லி இருக்கிறார். கிர்த்தி ஷெட்டி சிறப்பாக நடித்து இருக்கிறார்".
இவ்வாறு கார்த்தி பேசினார்.