டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

மலையாளத்தில் பிரபல நடிகரான பிரித்விராஜின் சகோதரர் இந்திரஜித் சுகுமாரன். அவரும் ஒரு நடிகர்தான். சமீபத்தில் அவரது நடிப்பில் தீரம் என்கிற படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஜித்தின் டி சுரேஷ் என்பவர் இயக்கியுள்ளார். திவ்யா பிள்ளை கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் கையாளப்பட்டுள்ள விமர்சன ரீதியான கருத்து காரணமாகவே இந்த படம் வளைகுடா நாடுகளில் கூட வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படம் ஓடும் திரையரங்கு ஒன்றுக்கு இயக்குனர் மற்றும் கதாநாயகி திவ்யா பிள்ளை உள்ளிட்டோர் வந்து, படம் முடியும்போது ரசிகர்களை சந்தித்து படம் எப்படி இருக்கிறது என்று கேட்டனர்.
அதில் ஒரு ரசிகர் நேருக்கு நேராக இந்த படம் ரொம்பவே மோசம்.. எங்களது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இந்த படம் பார்க்க வந்திருக்கிறோம். ஆனால் இந்த படத்தில் இப்படி விஷயத்தை சொன்ன முறை தவறு. இது ஒரு மோசமான படம் என்று கூறியதும், அங்கே இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த நாயகி திவ்யா பிள்ளை இரு தரப்பினரையும் சமாதானம் செய்து, “படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் அவரது கருத்துக்களை சொல்ல உரிமை உண்டு. அதை நாம் தடுக்கக்கூடாது. எல்லோருமே படம் பற்றி பாசிடிவாக சொல்வார்கள் என்றும் நாம் எதிர்பார்க்கக் கூடாது” என்று கூறி அங்கே எழுந்த சலசலப்பை அமைதிப்படுத்தினார்.