விஜய் நடித்த 'உன்னை நினைத்து' காட்சிகளைப் பகிர்ந்த விக்ரமன் | ஜன.,10க்கு தள்ளிப்போகிறதா 'ஜனநாயகன்'? | 'அகண்டா 2' மாதிரி ஆகிடுமா ஜனநாயகன் | ஜனவரி 30ல் வெளியாகும் ஜீத்து ஜோசப் படம் | நஷ்டமடைந்த 'ஏஜென்ட்' பட தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களுக்கு அகில் கொடுத்த வாக்குறுதி | ஆயிரம் படங்களில் நடித்த மூத்த மலையாள நடிகர் காலமானார் | 'மன சங்கர வர பிரசாத் காரு' படத்தின் மெகா புரமோஷனில் சிரஞ்சீவி கலந்து கொள்வாரா? | மூன்று வருடங்களுக்குப் பிறகு விஜய் பட நடிகையிடம் மன்னிப்பு கேட்ட புஷ்பா நடிகை | மீண்டும் சந்தித்த 'படையப்பா' படை | திரைப்பட பாடலாக உருவான சீமானின் மேடை பாட்டு |

ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருபவர் அர்ச்சனா கல்பாத்தி. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் 'மாற்றான், அனேகன், பிகில், லவ் டுடே, டிராகன்' உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்துள்ளனர். தற்போது அர்ச்சனா கல்பாத்தி யூடியூப் தளத்தில் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர்கள் தயாரிக்கும் படங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் கூறியதாவது, "பிரதீப் ரங்கநாதன் அடுத்து புதிதாக இயக்கி, நடிக்கவுள்ள படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கின்றோம். அது ரொம்ப நல்ல கதை. இதன் படப்பிடிப்பு 2026ம் ஆண்டில் துவங்கி, 2026ம் ஆண்டிற்குள் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்." எனக் கூறினார். ஏற்கனவே, ஏ.ஜி.எஸ் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் 'லவ் டுடே, டிராகன்' என இரு படங்கள் வெளியாகி இரண்டும், தலா 100 கோடிக்கு மேல் வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது.