டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

மோகன்லால் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் 'விருஷபா'. மலையாளம் மற்றும் தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிப் படமாக உருவாகியுள்ள விருஷபா வரும் டிசம்பர் 25ம் தேதி பான் இந்திய ரிலீசாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தை கன்னட இயக்குனர் கவுரி நந்தா இயக்கியுள்ளார். பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான ஏக்தா கபூர் இந்த படத்தை இன்னும் சில நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு நடிகர் மோகன்லால் பேசும்போது, “கன்னட டைரக்டர் ஒருவர் மலையாளம், தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படத்தை இயக்குவதும் அதை வடநாட்டு தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிப்பதும் என இதன் வித்தியாசமான கூட்டணியே இந்தப் படத்தின் சிறப்பம்சமாக என்னை கவர்ந்தது. அது மட்டுமல்ல இந்த படத்தின் கதையை கவுரி நந்தா என்னிடம் சொன்னபோது நிச்சயமாக இது வித்தியாசமான படமாக இருக்கப் போகிறது எனக்கு தெரிந்தது. இரண்டு வித காலகட்டங்களில் இந்த படம் நடக்கும் விதமாக உருவாகியுள்ளது” என்று கூறியுள்ளார்.