மலேசியாவில் குட்டி கதை சொல்வாரா விஜய் | மகனுக்காக போன் போடும் அப்பா : சிறை படத்தில் நடக்கும் சுவாரஸ்யம் | ரஜினியின் மூன்று முகம் ரீ ரிலீஸ் ஆகுது : ஆர்.எம்.வீரப்பன் மகன் தகவல் | ஜனநாயகன் படத்தின் ஹிந்தி தலைப்பு 'ஜன் நேட்டா' | சிக்மா படத்தின் டீசர் எப்படி இருக்கு | 60 நாட்களில் நிறைவு பெற்ற கென் கருணாஸ் பட படப்பிடிப்பு | முதன்முறையாக இணையும் சிரஞ்சீவி மோகன்லால் கூட்டணி | பைக் சாகசம் செய்து வீடியோ வெளியிட்ட பார்வதி | ஜன., 7ல் பாக்யராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம் ; ரஜினி பங்கேற்கிறார் | கோல்கட்டாவில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சிறந்த நடிகர் விருது |

தில் ராஜூ தயாரிப்பில், ரவி கிரண் கோலா இயக்கத்தில் விஜய்தேவரகொண்டா, கீர்த்திசுரேஷ் நடிக்கும் படத்துக்கு 'ரெளடி ஜனார்தனா' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் அடுத்த ஆண்டு டிசம்பரில் படம் ரிலீஸ் ஆகிறது. ஐதராபாத்தில் ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிகழ்வில் இந்த தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1980களில் கிழக்கு கோதாவரியை களமாகக் கொண்ட ஆக் ஷன் படமாக இந்த கதை உருவாகிறது. இதில் ரவுடி ஜனார்தனா என்ற வேடத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிமுக வீடியோவில் ரத்தம் தெறிக்க தெறிக்க பலரை வெட்டி சாயக்கிறார் விஜய் தேவரகொண்டா. அதோடு அந்த வீடியோவில் ஒரு காட்சியில் கெட்ட வார்த்தையும் பேசி உள்ளார். எப்படி இதை அனுமதித்தார்கள் என தெரியவில்லை.
கடந்த சில ஆண்டுகளாக விஜய் தேவரகொண்டாவுக்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை. அவர் நடித்த லைகர், குஷி, கிங்டம் ஆகிய படங்கள் வரிசையாக தோல்வி அடைந்து வருகின்றன. அதேபோல் கீர்த்தி சுரேஷ் நடித்த ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா படங்களும் தோல்வி அடைந்துள்ளன. ஆகவே இரண்டு பேரும் இந்த படத்தை எதிர்பார்ப்புடன் நோக்கி இருக்கிறார்கள்.
காதல் படங்களில் நடித்து வந்த விஜய் தேவரகொண்டா ஆக் ஷனுக்கும் மாறினார். அது அவருக்கு செட் ஆகவில்லை என பேச்சு வந்தது. ஆனாலும், இந்த படத்திலும் அவர் ஆக் ஷன் ஹீரோவாகவே நடிக்கிறார்.