டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

அல்லு அர்ஜுன், இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் 4வது முறையாக புராண காவிய கதைக்காக மீண்டும் இணைய இருக்கிறார்கள். இதுதொடர்பாக இருவரும் சந்தித்து பேசி உள்ளனர். இவர்கள் இணைந்த 'அலா வைகுந்தபுரமுலூ' தென்னிந்தியா முழுவதும் பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்தது.
இப்போது இணைய உள்ள, இந்தப் படம் இந்திய சினிமா இதுவரை பார்த்திராத அளவு பிரம்மாண்டமான புராண கதையாக ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. வலுவான கதை சொல்லல், பிரமாண்டமான காட்சிகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் இந்திய மற்றும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு இதுவரை பார்த்த புராண படங்களை மறுவரையறை செய்யும் என்று திரையுலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
பிப்ரவரி 2027ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வருகிறது. ஏற்கனவே ரன்வீர் கபூர், சாய் பல்லவி நடிப்பில் ராமாயணம் சினிமா ஆகி வருகிறது. அனுமன் கதை அனிமேசனில் உருவாகி உள்ளது. அல்லு அர்ஜூன் கதை எந்த புராண கதை என்பது பலரின் கேள்வி ஆக உள்ளது.