டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

ஸ்ரீ மதுராஜா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஸ்ரீமதுராஜா தயாரித்து நாயகனாக நடிக்கும் படம் 'புகார்'. 'ரூட்' படத்தை இயக்கிய ஏ.சி. மணிகண்டன் இயக்குகிறார். நாயகியாக ரஷ்மிதா நடிக்கிறார். இரண்டாவது ஹீரோவாக ராஜ்கிரண் மற்றும் இன்னொரு நாயகியாக ஜனுஷ்கா நடிக்கின்றனர். மற்ற கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
படம் குறித்து இயக்குனர் மணிகண்டன் கூறும்போது "கிரைம் திரில்லர் ஜானரில் இந்த படம் உருவாகிறது. இன்றைய சூழலில் காதலால் பல கௌரவ கொலைகள் அரங்கேறுகின்றன. அந்த குடும்பங்கள் சந்திக்கும் வலி, அதன்பிறகு அந்த குடும்பங்களின் நிலைமை என்ன ஆகிறது என்பது பற்றியும் காதலால் ஏற்படும் கொலைகளை தடுப்பதற்கு வழி சொல்லும் விதமாகவும் இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது" என்றார்.