'ஜனநாயகன்' டிரைலர் புதிய சாதனையை ஒரே நாளில் முறியடித்த 'பராசக்தி' | கிடப்பில் போடப்பட்ட பீமன் கதையை கையில் எடுக்கும் ரிஷப் ஷெட்டி | 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ரிச்சர்ட் ரிஷி - நட்டி | பைக் பயணமாக தனுஷ்கோடிக்கு விசிட் அடித்த மஞ்சு வாரியர் | 20 நிமிடங்கள் வரை ட்ரிம் செய்யப்பட்ட ராஜா சாப் | ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் | அமெரிக்கா, இங்கிலாந்தில் தி ராஜா சாப் முன்பதிவில் சாதனை | 30 நாட்களில் 1,240 கோடி வசூலித்த துரந்தர் | சிவகார்த்திகேயனுடன் பேசுவதைத் தவிர்த்தாரா விஜய் ? | லோகா வாய்ப்பை மறுத்தீர்களா ? கேள்வியால் டென்ஷனான பார்வதி |

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 'பராசக்தி'. இப்படத்தை 1965ம் ஆண்டு காலகட்டத்தில் நடந்த ஹிந்தி திணிப்பு கதையை மையப்படுத்தி உருவாக்கியுள்ளனர். இப்படம் முதலில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14ம் தேதி வெளியிடுவதாக அறிவித்தனர். பின்னர், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று ஜன.,10ம் தேதியே வெளியிடுவதாக அறிவித்தனர்.
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிலையில், இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. 3 நிமிடங்கள் 17 வினாடிகள் ஓடும் இந்த டிரைலரில், மத்திய அரசு பணியில் இருக்கும் சிவகார்த்திகேயன், ஹிந்தி ஆட்சிமொழியாக்கும் சட்டமாக உள்ளதாக அறிவிப்பு வெளியானதும், ஹிந்தி கற்க ஆசைப்படுகிறார். அதேநேரத்தில் மாணவராக இருக்கும் அவரது தம்பி ஹிந்தி திணிப்பை எதிர்த்து மாணவர்களுடன் போராடுகிறார்.
அதேநேரத்தில் ஆடியோ ஜாக்கியாக இருக்கும் நடிகை ஸ்ரீலீலா, சிவகார்த்திகேயனுக்கு ஹிந்தி கற்றுக்கொடுக்கிறார். இந்த ஹிந்தி திணிப்பு போராட்டம் இந்த மூவரின் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும், சாமானிய மனிதனாக மத்திய அரசு ஊழியராக இருக்கும் சிவகார்த்திகேயன், அரசுக்கு எதிராக, எப்படி ஒரு மாபெரும் மாணவர் புரட்சியின் தலைவனாக மாறுகிறார் என்பதுமே கதை என டிரைலரில் தெளிவாக தெரிகிறது. இவர்களை எதிர்க்கும் வில்லனாக ரவி மோகன் நடித்துள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரின் 100வது திரைப்படம் இது.
'எட்டாம் கிளாஸ் படிச்ச என்னை படிக்காத தற்குறி ஆக்கிட்டாங்க', 'ஹிந்திய திணிக்கிற மத்திய சர்க்காருக்கு அடிமை வேலை பார்த்து நல்லா சம்பாதிக்கிறான்', 'டில்லிதான் இந்தியாவா', ‛காலி பயலுங்க தான் மக்களோட பார்வைல தலைவர்களா தெரியலாம்ல சார்', ‛ஒரு கோடி பேருக்கு கேட்குற மாதிரி சுடுவோம், சத்தம் கேட்டு அவனே வருவான்', ‛மிஸ்டர் அண்ணா (அண்ணாதுரை) இதற்கு பின்னால் நீங்களா இருக்கிறீர்கள்? இல்லை, ஆனால் இத பண்ணவன் யாரா இருந்தாலும் அவன் என் தம்பி', ‛தமிழர்கள் ஹிந்தி திணிப்புக்கு தான் எதிரானவங்க, ஹிந்திக்கோ, ஹிந்திக்காரங்களுக்கோ இல்ல', ‛என் செந்தமிழை காக்க, பெரும் சேனை ஒன்று உண்டு' போன்ற வசனங்கள், அப்போதைய ஹிந்தி திணிப்பு போராட்டத்தை பிரதிப்பலிக்கின்றன.
மொழிப்போராட்டம் பற்றி இப்போது பலருக்கும் தெரியாதிருக்கும் நிலையில், இப்படம் அது சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்துமா, சில மாதங்களில் தமிழக சட்டசபை தேர்தல் வரும் சூழலில் அது அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது ஜன.,10ல் படம் வெளியான பின்பே தெரியும்.