மீண்டும் ஆயிரம் கோடி வசூலை எட்டுவாரா பிரபாஸ் | ‛பராசக்தி'க்கு யுஏ சான்று : நாளை படம் ரிலீஸ் | எதையும் யோசிக்காதீங்க, நல்லதே நடக்கும் : திருச்சியில் சிவகார்த்திகேயன் பேச்சு | ஜனநாயகன் படத்திற்கு சான்றிதழ் வழங்க ஐகோர்ட் உத்தரவு : மேல்முறையீடு செய்கிறது தணிக்கை வாரியம் | 'பராசக்தி, ஜனநாயகன்' டிரைலர்களை தட்டித் தூக்கிய 'டாக்சிக்' வீடியோ | தணிக்கை நடைமுறையில் உள்ள சிக்கல் : 'பராசக்தி' வெளியீடும் தள்ளிப் போகலாம் | பெண் இயக்குனர் இயக்கிய படமா? ராம்கோபால் வர்மா ஆச்சரியம் | ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல் : விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த திரைப்பிரபலங்கள் | தெலுங்கில் மாஸ் காட்டிய 'அகண்டா-2' முதல்... பீல் குட் மூவி 'அங்கம்மாள்' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | 'ஜனநாயகன்' தள்ளிப்போனதால் நிகிலா விமல் படத்துக்கு அடித்த ஜாக்பாட் |

அந்த காலத்தில் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர் ஜார்ஜ் குகோர். பல அழியாத கிளாசிக் படங்களை உருவாக்கியவர், அவற்றில் ஒன்று 'கேஸ்லைட்'. இந்த படத்தின் கதையை தழுவி சி.என்.அண்ணாதுரை எழுதிய நாவல்தான் 'ரங்கோன் ராதா'.
இந்த நாவலை கருணாநிதி திரைக்கதை வடிவமாக எழுதி பின்னர் அது படமானது. சிவாஜி, ஹீரோ, வில்லன் என்று மாறி மாறி நடித்துக் கொண்டிருந்த காலத்தில் நெகட்டிவ் ஹீரோவாக நடித்த படம் இது.
கோட்டையூர் தர்மலிங்க முதலியார் (சிவாஜி), வெளியுலகிற்கு ஒரு உத்தமராகத் தோன்றும் ஒரு தந்திரமான மனிதர். அவரது மனைவி ரங்கம் (பானுமதி). பணக்கார வீட்டு பெண். ரங்கத்தின் தங்கை தங்கம் (ராஜசுலோச்சனா). மனைவியின் தங்கை தங்கத்தை திருமணம் செய்து கொண்டால் அவர்களது முழு சொத்தையும் அடையலாம் என்று திட்டமிடும் முதலியார். முதல் மனைவிக்கு பைத்தியக்கார பட்டம் கட்டி அதன் மூலம் தங்கத்தை திருமணம் செய்துகொள்ள திட்டமிடுவார். அந்த திட்டங்கள் என்ன ஆகிறது என்பதுதான் படத்தின் கதை. சிவாஜி கொடுமைக்கார கணவனாகவும், காமுகனாகவும் நடித்திருந்தார்.
இந்த படத்தை ஏ.காசிலிங்கம் இயக்கி இருந்தார், டி.ஆர்.பாப்பா இசை அமைத்திருந்தார். படம் பெரிய வெற்றி பெற்றது.