தணிக்கை நடைமுறையில் உள்ள சிக்கல் : 'பராசக்தி' வெளியீடும் தள்ளிப் போகலாம் | பெண் இயக்குனர் இயக்கிய படமா? ராம்கோபால் வர்மா ஆச்சரியம் | ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல் : விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த திரைப்பிரபலங்கள் | தெலுங்கில் மாஸ் காட்டிய 'அகண்டா-2' முதல்... பீல் குட் மூவி 'அங்கம்மாள்' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | 'ஜனநாயகன்' தள்ளிப்போனதால் நிகிலா விமல் படத்துக்கு அடித்த ஜாக்பாட் | 'பராசக்தி' படத்தில் பசில் ஜோசப் ; உறுதி செய்த சிவகார்த்திகேயன் | சிறப்பு பாடல்களுக்கு இனிமேல் நடனமாட மாட்டேன்!- ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | 'பராசக்தி'யில் யுவன் சங்கர் ராஜா பாடிய 'சேனைக் கூட்டம்' பாடல் வெளியானது! | கார்த்தியின் 'வா வாத்தியார்' பொங்கலுக்கு திரைக்கு வருகிறதா? | 'தக் லைப்' விவகாரம் : அப்போது குரல் கொடுக்காத விஜய்.. |

விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் நாளை மறுநாள் (ஜன.,9) ரிலீஸ் ஆவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பதால், பட வெளியீட்டுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
நேற்று (ஜன.06) அவசர வழக்காக விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா, இன்றைக்கு ஒத்திவைத்தார். அதன்படி, இன்று மதியம் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதங்கள்:
தணிக்கை வாரியம் தரப்பு:
சான்றிதழ் வழங்காமல் நிறுத்துவதற்கு தணிக்கை வாரிய தலைவருக்கு அதிகாரம் உண்டு. தணிக்கை குழு உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்ததால் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. திருப்தி இல்லை என்றால் மறுஆய்வுக்கு அனுப்புவது வழக்கமானதுதான். முதல் தணிக்கைக்குழுவில் இருக்கும் ஐந்து பேர் மறுஆய்வுக்குழுவில் இருக்க மாட்டார்கள், வேறு ஐந்து பேர் தான் புதிய குழுவில் இருப்பர். புதிய உறுப்பினர்கள் படத்தை பார்க்க வேண்டியுள்ளது. அதனால் கால அவகாசம் வழங்கவேண்டும்.
நீதிபதி:
மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது குறித்து படக்குழுவுக்கு ஏன் தெரிவிக்கவில்லை?
தணிக்கை வாரியம்:
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழங்கக்கோரி பட நிறுவனம் டிசம்பர் 18ம் தேதி விண்ணப்பித்தனர். படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என ஜன.,5ம் தேதியே தயாரிப்பாளரிடம் கூறிவிட்டோம். சான்றிதழ் வழங்கப்படுவதற்கு முன்போ அல்லது மறுக்கப்படும் முன்போ நீதிமன்றத்தை அணுக முடியாது. மறு ஆய்வுக்குழுவுக்கு பரிந்துரைத்த 20 நாட்களுக்குள் புதிய குழு அமைக்கப்பட வேண்டும். அதேபோல், ஒரு படத்தை தணிக்கை செய்ய 15 நாட்கள் தேவைப்படும். எனவே, ஜனநாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க 4 வாரம் அவகாசம் தேவை. விதிகளின் அடிப்படையில் பரிசீலித்து மமுடிவெடுக்க மட்டுமே எங்களுக்கு அதிகாரம், இந்த விஷயத்தில் எங்களுக்கு தீயநோக்கம் எதுவுமில்லை. தணிக்கை குழுவின் அதிகாரத்தை கட்டுப்படுத்த முடியாது. பரிசீலித்து முடிவெடுக்க மட்டுமே தணிக்கை குழுவுக்கு உத்தரவிட முடியும். தணிக்கை சான்றிதழ் விவகாரத்தின் முடிவு, மத்திய அரசின் முடிவு அல்ல.
தயாரிப்பு நிறுவனம்:
ஜனநாயகனை முதலில் பார்த்த தணிக்கை குழுவினர் ஒருமனதாக 'யுஏ' சான்று வழங்க முடிவு செய்தனர். தணிக்கை குழுவை சேர்ந்தவர்களால் புகார் அளிக்க முடியாது. பரிந்துரைகள் தான் வழங்க முடியும். படத்தை பார்த்த ஐந்து பேரும் தனித்தனியாக பரிந்துரைகளை பதிவு செய்திருந்தனர். அதில் ஒருவர் மட்டும் எப்படி புகார் அனுப்ப முடியும்? தணிக்கை உறுப்பினர் ஒருவர் புகார் அளித்தது இதுவரை நடைமுறையில் இல்லாத ஒன்று. விண்ணப்பித்த ஒரு வாரத்தில் சான்றிதழ் வழங்குவதுதான் வழக்கம். ரூ.500 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஜனநாயகனை வேண்டுமென்றே இழுத்தடிக்கிறார்கள். குறித்த நேரத்தில் படம் வெளியிடப்படவில்லை என்றால் பெரும் இழப்பு ஏற்படும்.
நீதிபதி:
தணிக்கை வாரியத்தின் டைம்லைன்ஐ தயாரிப்பு நிறுவனம் பின்பற்றித்தான் ஆக வேண்டும்
தயாரிப்பு நிறுவனம்:
பெரும்பான்மை உறுப்பினர்கள் சான்று வழங்க பரிந்துரைத்தனர். பெரும்பான்மை இல்லாவிட்டால் மட்டுமே மறுஆய்வுக்கு அனுப்ப வேண்டும். அதிக உறுப்பினர்களின் முடிவை எப்படி செல்லாது என சொல்ல முடியும்?
தணிக்கை வாரியம்:
ஜனநாயகன் தணிக்கை சான்று விவகாரம் நேர்மையுடன் நடைபெற்றது.
தயாரிப்பு நிறுவனம்:
நாளை மறுநாள் ரிலீஸ் என என்பதால், இன்றே தீர்ப்பு வழங்கிடுங்கள்
நீதிபதி:
இன்றே வாதங்களை நிறைவு செய்யுங்கள், முடிந்தளவு நாளை மறுநாள் தீர்ப்பு வழங்க முயற்சிக்கிறேன்.
ஜன.,9ல் ரிலீஸ் என அறிவித்த நிலையில், அன்றைக்கு தான் தீர்ப்பு என நீதிபதி சொன்னது, ஜனநாயகன் படக்குழுவுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. அதுவும், முடிந்தளவு அன்றைக்கே தீர்ப்பு வழங்க முயற்சிப்பதாக கூறியதால், ஜன.,9ம் தேதியாவது தீர்ப்பு வருமா என்பது தெரியவில்லை. ஜன.9ல் சான்றிதழ் வழங்க தீர்ப்பளிக்கப்பட்டாலும், உடனடியாக தணிக்கை சான்று வழங்கிடுவார்களா அல்லது ஓரிரு நாட்கள் தள்ளிப்போகுமா என்பதும் புரியாத புதிராகவே உள்ளது.