பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

இந்த வாரம் இறுதி வரை பொங்கல் பண்டிகை களைக் கட்டியுள்ளதால், ஓடிடி ரசிகர்களுக்கு இனிப்பு பொங்கலாக அமையும் என்பதில் கொஞ்சம் கூட ஐயமில்லை என்பதற்குச் சான்றாக இந்த வாரம் வெளியாகும் ஓடிடி படங்கள் குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.
அனந்தா
புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அவரின் மகிமை, பக்தர்கள் வாழ்க்கையில் அவர் நிகழ்த்திய அற்புதங்களை அழகாக, உணர்ச்சிபூர்வமாக சொல்லும் படம் 'அனந்தா'. ஒய்.ஜி.மகேந்திரன், தலைவாசன் விஜய், ஜெகபதிபாபு உள்ளிட்டோர் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ள இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார், சிம்ப்ளி சவுத் உள்ளிட்ட சில ஓடிடியில் ஜன.,13ல் ரிலீஸ் ஆகியுள்ளது.
Bha Bha Ba
மலையாள இயக்குநர் தனஞ்செய் சங்கர் இயக்கத்தில் திலீப் நடித்துள்ள படம் 'Bha Bha Ba'. கொள்ளைக்காரன் ஒருவனுடன் சந்தர்ப்ப சூழ்நிலையால் இணையும் மூன்று வாழ்க்கை எப்படி மாறுகிறது என்ற கோணத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். இந்த படம் வருகின்ற ஜன.16ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
Dhandoraa
தெலுங்கு இயக்குநர் முரளிகாந்த் தேவசோத் இயக்கத்தில் நடிகர்கள் சிவாஜி, நவதீப், பிந்து மாதவி நடித்துள்ள படம் 'Dhandoraa'. குடும்ப பின்னணியுடன் எமோஷனல் கலந்த படமாக வெளியானது. இந்த படம் இன்று(ஜன.14ம் தேதி) அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது.
Downton Abbey: The Grand Finale
இயக்குநர் சைமன் கர்ட்ஸ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் 'Downton Abbey: The Grand Finale'. திரைப்படத்தில் வரும் மேரி என்ற பெண்ணின் கதாபாத்திரத்தின் குடும்பத்தில் நிகழும் சம்பவங்களே திரைக்கதையாக அமைப்பட்டிருக்கும். இந்த படம் கடந்த 12ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.
நிக்திதா ராய்(Nikita Roy)
தமிழில் லிங்கா படத்தில் நடித்த பாலிவுட் சோனாக்ஷி சின்ஹா நடித்த படம் 'Nikita Roy'. இந்த படத்தில் நிகிதா ராய் என்ற எழுத்தாளரும், இன்வெஸ்டிகேட்டருமான ஒரு உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவர போராடுவது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். இந்த படம் கடந்த 12ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
பேங்க் ஆப் பாக்கியலட்சுமி (Bank of Bhagyalakshmi)
கன்னட இயக்குநர் அபிஷேக் இயக்கத்தில், கன்னட நடிகர் தீக்ஷித் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் 'Bank of Bhagyalakshmi'. அழகான கிராமத்தில் நடக்கும் ஒரு கொள்ளையை மையமாக வைத்து இந்த படத்தின் திரைக்கதை அமைக்கபட்டிருக்கும். இந்த படம் கடந்த 12ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது.
Taskaree: The Smuggler's Web
பாலிவுட் இயக்குநர் நீரஜ் பாண்டே இயக்கியுள்ள வெப் சீரிஸ் 'Taskaree: The Smuggler's Web'. கஸ்டம்ஸ் அதிகாரியாக உள்ள அர்ஜுன் கடல் வலி கடத்தல் ஒன்றை தடுக்க எடுக்கும் முயற்சிகளே திரைக்கதையாக அமைக்கப்பட்டி இருக்கும். இந்த படம் இன்று(ஜன.14ம் தேதி) நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.