ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் அட்லி. ஹிந்தியில் ஷாரூக்கான் நடிப்பில் ‛ஜவான்' படத்தை இயக்கி, ஆயிரம் கோடி வசூலை பெற்று தந்தார். தற்போது அல்லு அர்ஜுனை வைத்து சூப்பர் ஹீரோ பாணியில் ஒரு படத்தை பிரமாண்ட பொருட்ச்செலவில் இயக்கி வருகிறார்.

சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரியாவை காதலித்து 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் அட்லி. 2023ம் ஆண்டு இவர்களுக்கு மீர் என்ற மகன் பிறந்தான். மும்பையில் இவர்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இந்நிலையில் பிரியா மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். தங்கள் குடும்பத்தில் இன்னொரு புது உறுப்பினர் வர உள்ளார் என்பதை இயக்குனர் அட்லி தனது பாணியில் போட்டோ மூலம் அறிவித்துள்ளார்.
பிரியா வெளியிட்ட பதிவில், ‛‛எங்கள் குடும்பத்தில் புதிய உறுப்பினர் சேரவிருப்பதால், எங்கள் வீடு இன்னும் அதிக மகிழ்ச்சியாக மாறப்போகிறது. ஆமாம், மீண்டும் கர்ப்பமாக இருக்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.




