பிரபல இயக்குனரின் பேத்தியை மணந்தார் நடிகர் அஸ்வின் குமார் | பெண் போராளியாக நடிக்கும் இனியா | பிளாஷ்பேக் : 'அண்ணாமலை'யை இயக்கிய 3வது இயக்குநர் | பிளாஷ்பேக் : 8 ஆயிரம் அடி நீக்கப்பட்ட 'பச்சை விளக்கு' | சர்வதே பதுக்கல் பின்னணியில் உருவாகும் 'சிவப்பு நட்த்திரம்' | மீண்டும் அம்மா ஆகிறார் 'மைனா' நந்தினி | மிஷ்கினுக்கும் எனக்கும் அப்பா - மகள் உறவு : கீர்த்தி சுரேஷ் கோபம் | இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பாரதிராஜா, பாக்யராஜிற்கு அஞ்சலி | ராதிகா ஆப்தே சர்ச்சை குறித்து மவுனம் கலைத்த கீர்த்தி சுரேஷ்! | பேசும் மற்றும் கேட்கும் திறனை மீட்டுத் தந்த மம்முட்டி : நெகிழ வைத்த குழந்தைகள் சந்திப்பு |

பெப்பர் மின்ட் சார்பில் ஆகாஷ் அமையா ஜெயின் தயாரிப்பில் ஜெயராம், விஜய் சேதுபதி, நகுல், ஆத்மிகா, ரித்திகா சென் நடிப்பில் சனில் இயக்கியுள்ள படம் 'காதல் கதை சொல்லவா'. ஷரத் இசையமைத்துள்ளார். ஷாஜன் களத்தில் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி பிப்ரவரி 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நகுல் நடித்துள்ள படம் இது. இந்த படத்தில் நடித்திருப்பது பற்றி அவர் கூறியிருப்பதாவது: இந்தப் படத்தின் தலைப்பை கேட்கும்போதே எனக்கு பிடித்திருக்கிறது. காதல் இல்லாமல் வாழ்க்கை இல்லை. 'பாய்ஸ்' படத்தில் நடிக்கும் போது சினிமா தொழில் மீது, கலை மீது எனக்குக் காதல் வந்தது. அதை நினைத்துப் பார்க்கும்போது எனது லவ் அதிகமாகிறது.
முதலில் அம்மா என்னை நேசித்தார்கள். நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அவர்கள் கனவு கண்டார்கள். அம்மாவின் நேசத்தை நினைத்துக் கொள்கிறேன். என் உடலின் மீது ஒரு காதல் வந்தது அதற்குப் பிறகு உடற்கட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்தேன். அதேபோல் எனது திருமணம் குழந்தை என்று காதலுக்கு அர்த்தம் வந்தது. காதல் என்பது வாழ்க்கையின் அடிப்படையான ஒன்று.
வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். "எது எப்போது நடக்குமோ அது அப்போது நடக்கும்" அதுதான் எனது வாழ்க்கையில நடக்கிறது. இந்தப் படத்தில் வித்தியாசமான கதை உள்ளது. இதில் வித்தியாசமான பாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். இங்கே எல்லோருக்கும் ஒரு காதல் கதை இருக்கிறது. இந்தக் கதையை அனைவரும் தொடர்பு படுத்திப் பார்த்துக் கொள்ள முடியும். என்றார்.




