மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு | சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு | தாய் கிழவி : நீண்ட இடைவெளிக்குப் பின்…. | ஆஞ்சநேயர் பிறந்த ஊரில் பூஜையுடன் துவங்கிய 'ஜெய் ஹனுமான்' | தனுஷை குறிப்பிட்டு பேசிய சிவகார்த்திகேயன் : கொச்சியில் நடந்தது என்ன? | தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு புது நிர்வாகிகள் : பல பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுமா? |

தமிழ்த் திரையுலகத்தின் இரு பெரும் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த். கதாநாயகர்களாக ஒரே காலகட்டத்தில் வளர்ந்தவர்கள். சில படங்களில் இணைந்து நடித்த பின் தனித்தனி கதாநாயகர்களாக நடிப்பது என பேசி அதன்பின் சேர்ந்து நடிப்பதை கறாராகத் தவிர்த்தவர்கள்.
47 வருடங்களுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது. இந்தியத் திரையுலகமே இவர்கள் இணைந்து நடிப்பதை ஆச்சரியம், அதிசயத்துடன் வரவேற்றுள்ளது.
தனது நண்பர் ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பது குறித்து படத்தின் அறிவிப்பு வீடியோவைப் பகிர்ந்து கமல்ஹாசன், “எனது நண்பர் ரஜினிகாந்துடன் ஒரு சிறப்பான ரியூனியன். ஒவ்வொரு சிறந்த பயணமும் இன்னொரு அத்தியாயத்திற்குத் தகுதியானது,” என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அதற்குப் பதிலளிக்கும் விதத்திலும் அல்லது அறிவிப்பு வீடியோவைப் பகிர்ந்தும் ரஜினிகாந்தும் எக்ஸ் தளத்தில் ஏதாவது பதிவு செய்வார் என்று இரண்டு நாட்களாகக் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 'படையப்பா' படத்தின் ரிரிலீஸ் குறித்து கூட பதிவிட்டிருந்தார் ரஜினிகாந்த். அதற்கு முன்பு 2022ல் 'பாபா' ரீரிலீஸ், அதற்கும் முன்பாக 2017 மற்றும் 2016ல் '2.0' குறித்தும், 2015ல் 'கபாலி' படப்பிடிப்பு ஆரம்பம் குறித்தும் பதிவிட்டுள்ளார்.
கமல்ஹாசன் குறிப்பிட்டது போல, இந்த 'சிறப்பான ரியூனியன்' குறித்து சமூக வலைத்தளங்களில் ரஜினிகாந்த் இதுவரை எதுவுமே பதிவிடவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.