300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'துரந்தர் 2' டிரைலர் | போர்சூழல் எதிரொலி : செய்தி சேனல்களுக்கு டிஆர்பி ரேட்டிங் வெளியிட தடை | தமிழில் நடிக்கும் குஷி ரவி | கடவுள் பெயரில் டைட்டில்கள் : கண்டிப்பு காட்டும் தணிக்கை குழு | பிளாஷ்பேக்': சினிமாவில் ஜெயிக்க முடியாத லட்சிய நடிகரின் மகன் | பிளாஷ்பேக் : ஹேமமாலினிக்கு செட்ட ஆகாத தமிழ் சினிமா | செல்வராகவன் அக்காவாக மாறிய கவுசல்யா | திருவண்ணாமலையில் படமாக்கப்பட்ட 'கொலைச் சேவல்' | ஓடிடியில் டாப் 2ல் 'வித் லவ்' | 'துரந்தர் 2' பிரிமியர்: தமிழகத்தில் சிறப்பான முன்பதிவு |

பொதுவாக ஜெமினி கணேசன் மென்மையான கேரக்டர்களிலேயே நடிப்பார். அவர் வில்லனாகவோ அல்லது நெகட்டிவ் கேரக்டரில் நடித்தது மிகவும் குறைவு. அந்தப் படங்களில் முக்கியமானது 'அதிசய திருடன்'. இதில் ஜெமினியுடன், சாவித்திரி, டி.எஸ்.பாலையா, கே.ஏ.தங்கவேலு, டி.பி.முத்துலட்சுமி, பேபி ராஜகுமாரி, கே.நடராஜன், வி.என்.ஏழுமலை ஆகியோர் நடித்திருந்தனர். பிரபலமான தெலுங்கு தயாரிப்பாளர்கள் டி.பி.நாராயணா மற்றும் எஸ்.பவாநாராயணா ஆகியோரால் இந்த படம் தயாரிக்கப்பட்டது. பி.புல்லையா இயக்கினார் .
கதை ஒரு தந்திரமான திருடனைப் பற்றியது (ஜெமினி கணேசன்). அமைச்சர் நீலகண்டம் (டி.எஸ். பாலையா) மாநிலத்தின் நிதியைக் கொள்ளையடிக்கிறார். அந்த அமைச்சரிடம் உள்ள மூன்று முக்கியமான வைரங்களைத் திருட திட்டமிடுகிறார் ஜெமினி கணேசன். அவரது காதலியான சாவித்திரி அவரை திருத்த முயற்சிக்கிறார். அவரும் திருந்தி விடுகிறார். ஆனால் மீண்டும் திருட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதன்பிறகு என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை.
தஞ்சை ராமையா தாஸ் திரைக்கதை, வசனம் எழுதிய இந்த படத்திற்கு பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் சுசர்லா தட்சிணாமூர்த்தி இசை அமைத்துள்ளார். அன்னையா ஒளிப்பதிவு செய்துள்ளார், வாஹினி ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது. டிஎம் சவுந்தரராஜன் பாடிய முருக பக்தி பாடலான 'முருகா என்றதும் உருகாத மனம்' என்ற பாடல் மிகவும் பிரபலமானது.