4 மொழிகள், 60 ஆண்டுகள், 620 படங்கள் : வெண்ணிற ஆடை மூர்த்திக்கு 90வது பிறந்தநாள் | மீண்டும் கதையின் நாயகியாக நடிக்கும் சாய் பல்லவி | டிசி படத்திற்கு எதிர்பார்ப்பை எகிறவைத்த அனிருத் | லவ் ஓ லவ் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு | நாரா ரோஹித் படத்திற்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா! | விஜயகாந்த் மகனை வம்பிழுத்த விருதுநகர் எம்எல்ஏ : வலுக்கும் கண்டனங்கள் | 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்திற்கு ஜோதிகா சொன்ன ஆலோசனை : வெங்கி அட்லூரி சஸ்பென்ஸ் | முதன்முறையாக நாகசைதன்யாவுக்கு இரவு உணவு சமைத்த சோபிதா துலிபாலா! | விரைவில் முழு இந்தியன் ஆவேன் : அமெரிக்க குடியுரிமையைத் துறக்கிறார் அகில் | தனுஷ் படம் பார்க்க தியேட்டருக்கு சென்ற விஜய் : டிக்கெட் கேட்ட ஊழியர் |

பரத் நடிப்பில் 2019ல் வெளியாகி வெற்றி பெற்ற படம் 'காளிதாஸ்'. அறிமுக இயக்குனர் ஸ்ரீசெந்தில் இயக்கியிருந்தார். பரத், ஆன் ஷீத்தல், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தின் 2ம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. அதையும் ஸ்ரீசெந்தில் இயக்கியுள்ளார், பரத் நாயகனாக நடித்துள்ளார்.
அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், 'ஆடுகளம்' கிஷோர், சுரேஷ் மேனன், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ, அபர்னதி உட்பட பலரும் நடிக்கிறார்கள். 'பூவே உனக்காக' படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை சங்கீதா இதில் முக்கியமான வேடத்தில் ரீ-என்ட்ரி ஆகிறார். சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். முதல் பாகம் ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்ட புலனாய்வு திரில்லராக அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதே பாணியில், இந்த இரண்டாம் பாகமும் உணர்ச்சிகரமான அதே சமயம் அதிரடியான களத்தில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 3ம் தேதி வெளியாவதாக அறிவித்துள்ளனர்.