ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்த 'அகாடமி ஆப் அச்சீவ்மென்ட்' விருது | ஆஸ்கர் விருது குழுவில் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் | பிளாஷ்பேக்: 'சிவாஜி' என்ற திரைக்கலைஞனை அடையாளம் கண்ட தயாரிப்பாளர் பி ஏ பெருமாள் | விசித்திரமான நோயால் அவதிப்படும் விஷ்ணு விஷால் | குடும்பமாக இணைந்து கலக்கிய 'பிளாஸ்ட்' முதல் இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள் ரிலீஸ்? | மக்களை சிரிக்க வைக்கும் பணி கடினமானது : அக்ஷய் குமார் | சிறிய விஷயங்கள் : நடிகர் சங்க பிரச்சனை குறித்து மம்முட்டி கருத்து | மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் நடிகர் தர்ஷன் ஜாமீன் மனு | சிலிர்க்க வைக்கும் தினமலர் சினிமா வாட்ஸ் அப் சேனலில் இணைந்திடுங்கள்: 'ஹாட் டிரெண்டிங் அப்டேட்ஸ்'-ஐ ரசியுங்கள்!! | இளம் நடிகைகள் ரிஸ்க் எடுக்கத் தயங்குகிறார்கள் ; அக்ஷய் குமார் வருத்தம் |

‛எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி, பட்டாஸ், கருடன்' போன்ற படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‛லீடர்'. ‛லெஜண்ட்' சரவணன் ஹீரோவாக நடிக்க, அவருடன் பாயல் ராஜ்புட், ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், லால் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்க, சரவணன் தயாரித்துள்ளார். இப்படம் நாளை(ஏப்., 3) ரிலீஸாகிறது.
இப்படம் தொடர்பாக துரை செந்தில்குமார் அளித்த பேட்டி, ‛‛சினிமா, பிசினஸ் இரண்டையும் தனித்தனியாக பிரித்து பார்ப்பவர் சரவணன். படத்திற்குள் வந்துவிட்டால் அதை முடித்துவிட்டு தான் அடுத்த பணிக்கு செல்வார். லீடருக்காக 10 கிலோ வரை எடை குறைத்தார். நடனம் உள்ளிட்ட எந்தவொரு விஷயத்தை வலுக்கட்டாயமாக திணிக்காமல் படத்துடன் வருவது போன்றே எடுத்துள்ளோம்.
படத்தில் மூன்று சண்டைக்காட்சிகள் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும். ஜார்ஜியா, தூத்துக்குடி, சென்னை போன்ற இடங்களில் இந்த கதை பயணிக்கும். இந்த படத்தில் அதிகம் சம்பளம் தந்தார்கள், அதற்காகவும் படம் பண்ணினேன். அதேசமயம் நான் எடுக்க நினைத்த சினிமாவையும் இப்படத்தில் எடுத்துள்ளேன். எது வேண்டுமானாலும் பண்ணிக்கோங்க, நான் தலையிட மாட்டேன் என சொல்லி தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டார் சரவணன். சில இன்புட்ஸ் மட்டும் கொடுத்தார். என் சினிமா பயணத்தில் பட்ஜெட் பிரச்னையால் சில விஷயங்கள் நடக்காமல் போய் உள்ளது. அது இந்த படத்தில் எடுக்க முடிந்தது'' என்றார்.




