காலை 6 மணி காட்சி : முதல்வர் விஜய்க்கு தனுஷ் நன்றி | 2026ல் மட்டும் சூர்யாவின் அதிகாரப்பூர்வ வசூல் 840 கோடி | பாலா படத்திற்கு இசையமைக்கும் லிடியன் | ஏதென்ஸில் குடும்பத்தினர் உடன் ரஜினி சென்ற சுற்றுலா போட்டோ வைரல் | விமல் நடிப்பில் சிம்புதேவன் இயக்கும் 'நவோரியா' | நவம்பர் 20ல் மும்முனைப் போட்டி - முன்பதிவில் முந்துவது யார் ? | தென்னிந்திய வசூலில் சாதனை படைத்த 'ராமாயணா' | மதிவதனி, காதம்பரி, பவானி, கோகிலா : நயன்தாரா நடிப்பில் கலக்கிய படங்கள் | ''மீண்டும் பிறந்தாலும்… நீயே வேண்டும்…'' - நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் வாழ்த்து | குடும்பத்தின் மூத்தவர்களுடன் சமந்தா தம்பதிக்கு நடந்த வழிபாட்டு நிகழ்ச்சி |

வட மாவட்ட தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை அழுத்தமாக சொன்ன படம் 'ஜமா'. அதை இயக்கி நடித்தவர் பாரி இளவழகன். அவரின் அடுத்த படம் 'அன்பே டயானா'. வட சென்னை பின்னணியில் படம் நகர்கிறது. இந்த படம் ஜூலை 17 ரிலீஸ் ஆகிறது. பாரி இளவழகன் ஜோடியாக, 'நீக்' (NEEK) பட ஹீரோயின் ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
'குட் நைட்', 'டூரிஸ்ட் பேமிலி' போன்ற படங்களைத் தொடர்ந்து, மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இந்த படத்தை வழங்குகிறது. காதல், குடும்பம் மற்றும் ஒன்றாக இருப்பதன் மகிழ்ச்சியை கொண்டாடும், மனம் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இது உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஆங்கிலோ இந்தியன் பெண், வட சென்னை பையன் காதலை சென்னையின் பெரம்பூர் பகுதியை பின்னணியாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளதாக தகவல்.
நடிகை ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு முக்கியமான முழுநீள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரத்தை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடுவார்கள் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.




