திருப்பதி பெருமாளாக நடிக்கும் ரவி மோகன் | 'திரிஷ்யம் : தி கன்க்ளூஷன்' டிரைலர் வெளியானது | ராம் பொதினேனி படத்தில் சம்யுக்தா | ஸ்ரீ ஸ்ரீ ரிலீஸ் எப்போது | மீனவனாக நடித்தது பாக்கியம் : சூரி நெகிழ்ச்சி | சர்தார் 2, மண்டாடி படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | ‛ஜனவரி 12 விடுதலை' படம் : ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட பதிவு | சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய், நடிகர் ரஜினி இரங்கல் | சாலமன் பாப்பையா காலமானார் | மீண்டும் ஜாக்பாட் நிகழ்ச்சி... : குஷ்புவின் டிசைனர் யார் தெரியுமா? |

தமிழில் 'பீட்சா, ஜிகர் தண்டா, பேட்ட, ஜகமே தந்திரம், ரெட்ரோ' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்பராஜ். தற்போது சில புதுமுகங்களை வைத்து குறுகிய கால கட்டத்தில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதற்கு அடுத்து கார்த்திக் சுப்பராஜ் அடுத்து ஒரு ஆக்சன் படத்தை தான் உருவாக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக அதர்வா நடிக்கவுள்ளார் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் உபேந்திரா நடிக்கவுள்ளார் என்கிற தகவலை தெரிவித்திருந்தோம்.
இந்த நிலையில் இந்த படத்தில் அதர்வாவிற்கு அப்பா கதாபாத்திரத்தில் நடன இயக்குனர் மற்றும் நடிகர் பிரபுதேவா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரிக்கின்றனர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.




