சூர்யாவின் 47வது படம் 'சீன்': நவ.,6ல் ரிலீஸ் | நடிகர் பிரபு நடிக்கும் நகைச்சுவை படம் 'அழகிய லைலா' | தாய்மையை எதிர்நோக்கும் சமந்தா! என் வாழ்க்கை முற்றிலும் மாறுவதற்கு நான் தயார்!! | 'பௌசி' ரிலீஸ் ஒத்திவைப்பு? ரிலீசுக்கு தயாராகும் துல்கர் சல்மான்- நாக சைதன்யா படங்கள்! | ரவிதேஜாவின் 'இருமுடி' நெட்பிளிக்ஸில் எப்போது வெளியாகிறது? | ஹிந்தி பற்றிய கருத்து: மன்னிப்பு கோரிய சிவராஜ்குமார் | ஜெர்மனியில் நடந்த அதிசயம்: இளையராஜா சொன்ன தகவல் | 'சொல்லாமலே' கிளைமாக்ஸ், 'பூ' வாழ்வியல், 'பிச்சைக்காரன்' கரு, 'நுாறுசாமி' சேதி.. இயக்குனர் சசியை மறக்க முடியுமா? | முன்னணி இளம் ஹீரோயின் யார்? அனிஷ்மா, மமிதா, கயாடு லோஹர் இடையே கடும் போட்டி | தீபாவளி ரிலீசுக்கு வரிசைகட்டும் படங்கள் |

தெலுங்கில் நடிகை சமந்தா நடிப்பில், ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் 'மா இன்ட்டி பங்காரம்' திரைப்படம் வெளியானது. நந்தினி ரெட்டி இப்படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகியை மையப்படுத்தி உருவான இந்தப் படத்தை சமந்தாவுடன் சேர்ந்து அவரது கணவரான ராஜ் நிடிமொரு தயாரித்திருந்தார். 1980களின் பின்னணியில் ஒரு பெண்ணின் உணர்ச்சிகரமான வாழ்க்கை போராட்டத்தைச் சொல்லும் விதமாக இந்தப் படம் உருவாகியிருந்தது. தற்போது இந்தப் படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று சுமார் 60 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
இந்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் வெற்றி விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.. இது குறித்து தயாரிப்பாளர் ராஜ் நிடிமொரு கூறும்போது, "முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகம் இரு மடங்கு அதிக மகிழ்ச்சியையும் விறுவிறுப்பையும் தரும். இதற்கான கதைக்கரு ஏற்கனவே தயார் நிலையில் இருக்கிறது. முதல் பாகத்தில் பணியாற்றிய அதே குழுவினரே இந்தப் படத்திலும் பணியாற்றுவார்கள்" என்றும் கூறியுள்ளார்.




