அல்லு அர்ஜூனின் 'ராக்கா': விரைவில் பெரிய அறிவிப்பு வரும் என படக்குழு சூசகம்! | முதல்முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் ருக்மணி வசந்த் | 'ஜோசப்' பட இயக்குனரின் டைரக்சனில் நடிக்கும் அமலா பால் | 'இருமுடி' படக்குழுவினரை நேரில் சென்று வாழ்த்திய சிரஞ்சீவி - ராம்சரண் | பூஜையுடன் தொடங்கியது பிரித்விராஜ் - மஞ்சு வாரியரின் 'ஒடியன்' படப்பிடிப்பு | ரசிகர்கள் எதிர்பார்த்த 'மொத ராத்தரி' முதல் 'இருமுடி' வரை: இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்...! | வினித் சீனிவாசன் படத்தில் காட்டியது போலவே நிஜமான நிவின் பாலியின் திரைப்பயணம் | இந்தியாவின் எம்.ஜி.ஆர். ஆக வேண்டும் ; எஸ்.ஜே. சூர்யாவின் லட்சியம் | இளையராஜா - அனிருத் இணையும் இசை நிகழ்ச்சி.. தயாரிப்பாளர் சங்க நலனுக்காக பிப்ரவரி 13ல் நடக்கிறது | எம்எஸ் சுப்புலட்சுமி 'பயோபிக்' : ஆச்சரியத்தை ஏற்படுத்திய அனிருத் பெயர் |

தமிழக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் இந்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் எந்த தேதியில் வெளியாகும் என உறுதியாக தெரியவில்லை. ஜூலை 17, 24 அல்லது 31ல் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்பு என்று கூறப்படுகிறது. ஜனநாயகன் ரிலீஸ் ஆனால் அந்த தேதியில் நம் படத்தை விட வேண்டாம் என பல நிறுவனங்கள் நினைக்கின்றன. நம் படத்துக்கு தியேட்டர் கிடைக்காது என்று நம்புகிறார்கள். அதனால், ஜனநாயகன் வந்தபின் அல்லது அதற்கு 2 வாரத்துக்கு முன் வரலாம் என நினைக்கிறார்கள்.
ஆனால், ஜனநாயகன் ரிலீஸ் தேதி உறுதியாக தெரியாத நிலையில் பலர் தவிக்கிறார்கள். குறிப்பாக 10க்கும் அதிகமான படங்கள் இந்த சிக்கலில் மாட்டி இருக்கிறதாம். இந்த வாரம் லவ் ஓ லவ், இதயம் முரளி, லட்சுமிகாந்தன் கொலை வழக்கு, முதற்கனல் உள்ளிட்ட படங்களும், அடுத்த வாரம் ஜூலை 17 அர்ஜூன் பெயர் பத்து, ஓ சுகுமாரி, அன்பே டயானா, அருள்வான், தி டார்க் ஹெவன், பிளாக் கோஸ்ட், பகவான் படங்களும், ஜூலை 23ல் இம்மார்ட்டல், தி இந்தியா ஸ்டோரி படங்களும் வர உள்ளன. ஜனநாயகன் வந்தால் இந்த படங்களில் சில பின்வாங்கும் என தெரிகிறது. அடுத்த மாதம் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ், டாக்சிக், டிரைன், மகுடம் படங்கள் வருவதால் சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைக்காத சூழல் ஏற்படும்.




