Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பூஜையுடன் கைவிடப்பட்ட மோகன்லாலின் 'ஆபரேஷன் ராஹத் ': இயக்குனர் மேஜர் ரவி தகவல்.

10 ஜூலை, 2026 - 10:39 IST
எழுத்தின் அளவு:
Mohanlals-Operation-Rahat-abandoned-with-Pooja-Director-Major-Ravi-informs.
Advertisement

மலையாளத்தில் மோகன்லாலை வைத்து தொடர்ந்து ராணுவப் பின்னணியில் படங்களை இயக்கி வந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியும், இயக்குனருமான மேஜர் ரவி. கிட்டத்தட்ட பத்து வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மோகன்லால் நடிப்பில், ராணுவ பின்னணியில் 'ஆபரேஷன் ராஹத்' என்கிற படத்தை இயக்குவதாக அறிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் பூஜையும் நடைபெற்றது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடிக்கிறார் என்ற செய்தியும் வெளியானது. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், இந்த படம் கைவிடப்பட்டதாக ஒரு அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளார் மேஜர் ரவி.

இதுபற்றி அவர் கூறும்போது, "இந்த படம் கிட்டத்தட்ட 30 கோடி பட்ஜெட்டில் தான் உருவாக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் இந்த படத்தில் அக்ஷய் குமார் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை உள்ளே நுழைக்கத் திட்டமிட்டனர். என்னுடைய அனுமதியின்றியே இது நடைபெற்று, கிட்டத்தட்ட 200-ல் இருந்து 230 கோடி பட்ஜெட் வரை திட்டமிடப்பட்டது. குறிப்பாக, அக்ஷய் குமாருக்கு 80 கோடி சம்பளம் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

30 கோடியில் திட்டமிட்ட படத்திற்கு 230 கோடி ரூபாய் செலவிடுவது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்பதாலும், வணிக ரீதியாக சரியான முடிவாக இருக்காது என்பதாலும் இந்தப் படத்தில் இருந்து விலகிக் கொண்டேன் என்று கூறியுள்ளார் மேஜர் ரவி. இந்த படம் கைவிடப்பட்டது என அவர் நேரடியாக சொல்லாவிட்டாலும் இந்த படத்தை இயக்குவதில் இருந்து தான் விலகிக் கொண்டதாக உறுதியாகக் கூறியுள்ளார். இதனால் மேஜர் ரவி - மோகன்லால் கூட்டணியில் ஒரு ராணுவப் படத்தை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தற்போது ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிரபாஸ் படப்பிடிப்பில் பாலிவுட் நடிகருக்கு சுகவீனம் ; முதல்வர் வரை சென்ற விவகாரம்பிரபாஸ் படப்பிடிப்பில் பாலிவுட் ... முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் உடன் மோதும் சென்னை லவ் ஸ்டோரி முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் உடன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap