Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாணவர்களின் எதிர்ப்பு : மவுனம் கலைத்த மாதவன்

24 ஜூலை, 2026 - 12:39 IST
எழுத்தின் அளவு:
Students-protest-Madhavan-breaks-silence
Advertisement

நீட் தேர்வு வினாத்தாள் லீக்கான விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து டில்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். இதில் சினிமா பிரபலங்கள் பலர் மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். அதேசமயம் புனேவில் உள்ள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக இருக்கும் ஆர். மாதவன் நீட் விவகாரம் குறித்தும் மாணவர்கள் போராட்டம் குறித்தும் எவ்வித கருத்துக்களும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்து வந்தார்.

அங்கே படிக்கும் மாணவர்கள் மாதவனின் அலுவலக கதவில் காணவில்லை என்றும், நீட் விற்பனைக்கு உள்ளது என்பது போன்றும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்டி மாதவனின் அமைதிக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மவுனம் கலைத்த மாதவன் தனது சோஷியல் மீடியா பக்கம் மூலமாக வெளியிட்டுள்ள பதிவில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கவலைகளில் தானும் பங்கேற்பதாகவும் வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்கள் இளைஞர்களின் நம்பிக்கையைச் சிதைப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தில் தவறு இழைத்தவர்கள் மீது அரசு உடனடியாகவும் உறுதியாகவும் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் தற்காலிக தோல்விகளால் வேதனை அடைய வேண்டாம், தங்களின் திறமை மற்றும் கடின உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து முன்னேற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
என்னுடன் நடித்தவர்களுக்கு அரசியலில் அதிர்ஷ்டம் : பாலிவுட் நடிகர் பாபி தியோல்என்னுடன் நடித்தவர்களுக்கு ... புதுச்சேரியில் 13 தியேட்டர்களில் ஜனநாயகன் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டது ஏன் ? புதுச்சேரியில் 13 தியேட்டர்களில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Balaji - ,இந்தியா
24 ஜூலை, 2026 - 04:07 Report Abuse
Balaji சூப்பர் மாதவன் சார்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap