கடும் தீபாவளி போட்டி, மீண்டும் தள்ளிப் போகிறதா 'அப்பா குட்டி' ? | ஒரே வாரத்தில் ரூ.549 கோடி: 'ஜெயிலர் 2' வசூல் சாதனை | அல்லு அர்ஜூனின் 'ராக்கா' படத்தின் ஓராண்டு கவுண்டவுன் போஸ்டர் விரைவில் வெளியாகிறது! | துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறாரா பவன் கல்யாண்? | நானியின் 'தி பாரடைஸ்' நெட்பிளிக்ஸில் 5 மொழிகளில் வெளியானது! | 'ஜெயிலர் 2'வில் நடிக்க ஹிருத்திக் ரோஷன் சம்பளமே வாங்கவில்லையா? | 'சீன்' படத்தில் கண் பார்வை இல்லாத வேடத்தில் நடிக்கிறாரா சூர்யா?- ஜீத்து மாதவன் அளித்த விளக்கம் | ஓடிடி, சாட்டிலைட் உரிமையில் புதிய சாதனை படைத்த 'ராமாயணா' | 'ஜெயிலர் 2' குழுவிற்கு அல்லு அர்ஜூன் பாராட்டும் வாழ்த்தும்… | சின்னத்துரை: மூக்குத்தி அம்மனாக நடிக்கும் சுஜிதா |

மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வரவிருக்கும் ஆக்ஷன் திரில்லர் படமான ஐ ஆம் கேம் படம் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அன்று திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இறுதிக்கட்ட பணிகள் இன்னும் முடிவடையாததால், படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் தற்போது செப்டம்பர் 3ம் தேதி அன்று உலகம் முழுவதும் ஐ ஆம் கேம் படம் திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
அதோடு இப்படத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் மிக பிரம்மாண்டமாக வெளியிடவும் திட்டமிட்டு வருவதாக கூறியுள்ளனர். ஐ ஆம் கேம் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள இப்படத்தில் துல்கர் சல்மானுடன், கயாடு லோஹர், ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கதிர், சம்யுக்தா விஸ்வநாதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.




