Advertisement

சிறப்புச்செய்திகள்

சூர்யாவின் 47வது படம் 'சீன்': நவ.,6ல் ரிலீஸ் | நடிகர் பிரபு நடிக்கும் நகைச்சுவை படம் 'அழகிய லைலா' | தாய்மையை எதிர்நோக்கும் சமந்தா! என் வாழ்க்கை முற்றிலும் மாறுவதற்கு நான் தயார்!! | 'பௌசி' ரிலீஸ் ஒத்திவைப்பு? ரிலீசுக்கு தயாராகும் துல்கர் சல்மான்- நாக சைதன்யா படங்கள்! | ரவிதேஜாவின் 'இருமுடி' நெட்பிளிக்ஸில் எப்போது வெளியாகிறது? | ஹிந்தி பற்றிய கருத்து: மன்னிப்பு கோரிய சிவராஜ்குமார் | ஜெர்மனியில் நடந்த அதிசயம்: இளையராஜா சொன்ன தகவல் | 'சொல்லாமலே' கிளைமாக்ஸ், 'பூ' வாழ்வியல், 'பிச்சைக்காரன்' கரு, 'நுாறுசாமி' சேதி.. இயக்குனர் சசியை மறக்க முடியுமா? | முன்னணி இளம் ஹீரோயின் யார்? அனிஷ்மா, மமிதா, கயாடு லோஹர் இடையே கடும் போட்டி | தீபாவளி ரிலீசுக்கு வரிசைகட்டும் படங்கள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

துருவ் விக்ரமுக்கு அடுத்த சிக்கல்: கால்ஷீட் பிரச்னை தொடர்பாக நாளை பிரஸ்மீட்

18 ஆக, 2026 - 12:46 IST
எழுத்தின் அளவு:
Dhruv-Vikrams-next-issue-tomorrow-press-release-regarding-call-sheet-issue
Advertisement


விக்ரம் மகன் துருவ் விக்ரமிற்கு சில நாட்களாக நேரம் சரியில்லை. அவர் மீது மறைமுகமாக குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியிருக்கிறார் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தனது காதலன் தன்னை துன்புறுத்தினார். அவர் அந்நியனாக, அம்பியாக, ரெமோவாக இருந்தார். அந்த காதலால் தான் பலவகைகளில் பாதிக்கப்பட்டேன் என்று பேட்டி கொடுக்க, அது வைரல் ஆகியுள்ளது.

நேரடியாக துருவ் மீது குற்றம் சாட்டாவிட்டாலும் சமூக வலைதளங்களில் துருவ் விக்ரமை ஒரு வில்லன் ரேஞ்சுக்கு சித்தரித்து ஏகப்பட்ட பதிவுகள். துருவ் விக்ரம் செயல்களை விமர்சித்து ஏகப்பட்டபேர் வீடியோவில் பேசி வருகிறார்கள். இதுவரை அனுபமா குற்றச்சாட்டு குறித்து துருவ் பதில் அளிக்கவில்லை.

இந்நிலையில், அடுத்த அதிரடியாக அவர் மீது பரபரப்பு புகார் கொடுக்க ஒரு நிறுவனம், இயக்குனர் தயாராகி வருகிறார். நாளை மதியம் 3 மணிக்கு துருவ் விக்ரம் குறித்து பிரஸ்மீட் வைத்து அவர் மீதான தவறுகளை சொல்வதாக அறிவித்துள்ளார். அதென்ன பிரச்னை என்று விசாரித்தால், நீலாத்திரி என்ற நிறுவனம் தயாரிக்க, ரமேஷ்வர்மா என்பவர் இயக்கும் படத்தில் துருவ் கமிட்டானார். அதற்கு முன்பணமாக பெரிய தொகை பெற்றார். துருவ் விக்ரம் 4வது படமாக அந்த படம் உருவாக இருந்தது. ஆனால், இப்போது அதிலிருந்து விலகி மைத்ரி நிறுவனம் தயாரிக்க, கரண் இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார். இதனால், பாதிக்கப்பட்ட நீலோத்ரி நிறுவனம் சினிமா சங்கங்களில் புகார் செய்தது.

இன்னமும் தீர்வு காணப்படாத நிலையில், சென்னையில் நாளை மதியம் தங்கள் தரப்பு நியாயம், துருவ் விக்ரம் மீது குற்றச்சாட்டுகளை வைக்க உள்ளதாக அந்த தரப்பு தெரிவித்துள்ளது. நீலாத்ரி நிறுவனம் சார்பில் அல்லது அந்த பட இயக்குனர் ரமேஷ்வர்மா மீடியாவை சந்தித்து அந்த பட பிரச்னைகள் குறித்து பேச உள்ளார். அனுபமா பரமேஸ்வரன் விவகாரத்தை தொடர்ந்து, இந்த பிரச்னையும் துருவ் விக்ரமுக்கு தலைவலியாக மாறியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
“ஜி.டி.என் படத்தை  மாணவர்கள் பார்க்கணும்'': சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்“ஜி.டி.என் படத்தை மாணவர்கள் ... 'ஜெயிலர் 2' ரிலீஸ் தள்ளிப்போகிறதா? நவம்பர் 5ல் ரிலீஸா? 'ஜெயிலர் 2' ரிலீஸ் தள்ளிப்போகிறதா? ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap