'கிங்' படம் கிறிஸ்துமஸ்க்கு வெளியாவது உறுதி: ஷாருக்கான் அதிகாரப்பூர்வமாக தகவல் | படத்தைப் பார்த்து பயந்து ஓடிய மக்கள் : வரலாற்றில் இடம்பிடித்த 3 ஹாரர் படங்கள் | 'துரந்தர்' படத்தின் வசூல் சாதனையை முறியடித்த 'ஹனுமான் அன்ஷ்' | 90ஸ் Vs லேட்டஸ்ட் : ஹீரோக்களின் ஓப்பனிங் பாடல்... ரசிகர்களை கவர்வதில் எது பெஸ்ட்? | சல்மான்கானின் 'மாத்ருபூமி' விரைவில் திரைக்கு வருகிறதா? | வெங்கடேஷ் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் நிவேதா பெத்துராஜ், டிம்பிள் ஹயாதி! | டி.ராஜேந்தரின் இசையில் முதல் முறையாக பாடிய இளையராஜா | திரிஷாவுக்கு நடிகை அம்பிகா கொடுத்த அட்வைஸ்! | ஆணவக் கொலைக்கு கடும் தண்டனை வேண்டும் : அனு மோல் | இளையராஜா, சரத்குமாரை சந்தித்த எழுத்தாளர் சங்கத்தினர் |

தமிழ் சினிமாவில் இதுவரையில் வெளியான பாடல்களில் யு டியூப் தளத்தில் அதிகப் பார்வைகளைப் பெற்ற பாடல்களில் 'மாரி 2' படத்தில் இடம் பெற்ற 'ரவுடி பேபி' பாடல் 1700 மில்லியன் பார்வைகளைக் கடந்து முதலிடத்தில் உள்ளது.
வேறு எந்த ஒரு பாடலும் 1000 மில்லியன் பாடலைக் கடக்கவில்லை. 'பீஸ்ட்' படத்தில் இடம் பெற்ற 'அரபிக்குத்து' பாடல் 800 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. அப்பாடல் வேண்டுமானால் இன்னும் சில மாதங்களில் 1000 மில்லியன் பார்வைகளைக் கடக்க வாய்ப்புள்ளது.
300 மில்லியன் பார்வைகளைக் கடந்த பாடல்களாக ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்த இரண்டு பாடல்கள் உள்ளன. அவரது இசையில் கடந்த வருடம் வெளிவந்த முன்பு 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தின் 'கோல்டன் ஸ்பாரோ' பாடல் சில வாரங்களுக்கு முன்பு 300 கோடி பார்வைகளைக் கடந்தது.
அடுத்து, இந்த வருடம் வெளிவந்த 'யூத்' படத்தின் 'முட்ட கலக்கி' பாடல் தற்போது 300 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. கடந்த ஜுலை மாதக் கடைசியில்தான் இப்பாடல் 250 மில்லியன் பார்வைகளைக் கடந்திருந்தது. ஒரு மாதத்தில் மேலும் 50 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று.




