பிளாஷ்பேக்: “பொண்ணு ஊருக்கு புதுசு” தந்த புதிய திரை வரவுகள் | விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்தது குறித்து ஆண்டனி வர்கீஸ் வருத்தம் | "நான் ஓய்வு பெறும் காலம் வந்துவிட்டதா?" : டாப்சி வெளிப்படைப் பேச்சு | "என் தந்தை எனக்கு சர்க்கஸ் வலை போல அரணாக இருப்பார்..." : மம்முட்டி குறித்து துல்கர் சல்மான் பெருமிதம் | விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் முதல்வர் விஜய்க்கு வாழ்த்துகள்: நடிகர் அஜித்குமார் | இருமுடி : வினியோக உரிமை வாங்கி அதிகம் சம்பாதித்த ரவி தேஜா | விரைவில் லக்கி பாஸ்கர் 2 : துல்கர் சல்மானை உற்சாகப்படுத்திய வெங்கி அட்லூரி | சர்தார் 2 ரிலீஸ் எதிரொலி : முதல்வர் விஜய்யிடம் கார்த்தி வைத்த கோரிக்கை | 100 கோடி வசூலித்த 'டிசி' முதல் மாதவன் கலக்கிய 'ஜிடிஎன் வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பகவான் கிருஷ்ணராக விஜய் தேவரகொண்டா |

'மகுடம்' படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார் விஷால். அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுக்கும் விதத்தில் அந்தப் படத்தின் ரிசல்ட் அமைந்தது. ஓரிரு நாட்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாத படத்தைத் தியேட்டரை விட்டு தூக்கினார்கள்.
சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் மற்றும் வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் ஆகியோரிடம் பெற்ற கடனை சரி செய்வதற்காகத்தான் 'மகுடம்' படத்தில் நடித்தாராம் விஷால். ஆனால், அந்த பழைய கடனுடன் சேர்ந்து 'மகுடம்' படத்திற்காக ஏற்பட்ட புதிய கடனும் சேர்ந்து இப்போது 'கடனுக்கு மேல் கடன்' ஆகிவிட்டதாம்.
அதனால், அடுத்த படத்தில் நடிக்கும் வேலையை மட்டும் பார்ப்போம் என்ற முடிவுக்கு வந்துள்ளாராம் விஷால். அவரது அடுத்த படத்தை துரை செந்தில்குமார் இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த 'எதிர் நீச்சல்', தனுஷ் நடித்த 'கொடி', சசிகுமார் நடித்த 'கருடன்' லெஜண்ட் சரவணா நடித்த 'லீடர்' ஆகிய படங்களை இயக்கியவர் துரை செந்தில்குமார்.
இப்படத்தை முன்னணி தயாரிப்பாளரான லலித்குமார் தயாரிக்க உள்ளதாகச் சொல்கிறார்கள். அவரது தைரியத்தைப் பார்த்து திரையுலகமே ஆச்சரியத்தில் உள்ளது என்கிறார்கள்.