Advertisement

சிறப்புச்செய்திகள்

அல்லு அர்ஜூனின் 'ராக்கா': விரைவில் பெரிய அறிவிப்பு வரும் என படக்குழு சூசகம்! | முதல்முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் ருக்மணி வசந்த் | 'ஜோசப்' பட இயக்குனரின் டைரக்சனில் நடிக்கும் அமலா பால் | 'இருமுடி' படக்குழுவினரை நேரில் சென்று வாழ்த்திய சிரஞ்சீவி - ராம்சரண் | பூஜையுடன் தொடங்கியது பிரித்விராஜ் - மஞ்சு வாரியரின் 'ஒடியன்' படப்பிடிப்பு | ரசிகர்கள் எதிர்பார்த்த 'மொத ராத்தரி' முதல் 'இருமுடி' வரை: இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்...! | வினித் சீனிவாசன் படத்தில் காட்டியது போலவே நிஜமான நிவின் பாலியின் திரைப்பயணம் | இந்தியாவின் எம்.ஜி.ஆர். ஆக வேண்டும் ; எஸ்.ஜே. சூர்யாவின் லட்சியம் | இளையராஜா - அனிருத் இணையும் இசை நிகழ்ச்சி.. தயாரிப்பாளர் சங்க நலனுக்காக பிப்ரவரி 13ல் நடக்கிறது | எம்எஸ் சுப்புலட்சுமி 'பயோபிக்' : ஆச்சரியத்தை ஏற்படுத்திய அனிருத் பெயர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: மறைக்கப்பட்ட இசை கலைஞர்

17 செப், 2026 - 12:45 IST
எழுத்தின் அளவு:
Flashback-The-Hidden-Musician
Advertisement


தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளர்களைத்தான் வெளி உலகத்திற்கு தெரியும், அவர்களுக்கு பின்னால் இருப்பவர்கள், பாடல்களுக்கு பின்னால் இருப்பவர்களைப் பற்றி அதிகம் தெரியாது. ஒவ்வொரு பாடலும் உருவாவது ஆர்மோனிய பெட்டி, அல்லது கீ போர்ட்டில் இருந்துதான். அப்படிப்பட்ட கீ போர்ட் வாசிப்பில் திறமையானவராக இருந்தவர்தான் விஜி மேனுவல்.

இசை குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வந்த இவர் இளையராஜாவின் முதன்மை கீபோர்டு வாசிப்பாளராகவும், அவரது நீண்டகால நெருங்கிய உதவியாளராகவும் பல தசாப்தங்களாகப் பணியாற்றினார். இளையராஜாவின் ஆரம்பகாலப் பாடல்களில் விஜி மேனுவல் பேஸ் கிட்டார் கலைஞராகப் பணியாற்றினார். பின்னர், கீபோர்டு மற்றும் பியானோ வாசிப்பதில் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தினார்.

இளையராஜாவின் இசையில் உருவான பல நூறு ஹிட் பாடல்களின் பின்னணியில் இருக்கும் அட்டகாசமான கீபோர்டு மற்றும் எலெக்ட்ரிக் பியானோ சோலோக்கள் இவரால் வாசிக்கப்பட்டவை. இளையராஜாவின் பல நேரடி இசை நிகழ்ச்சிகளிலும் இவர் முக்கியக் கலைஞராக மேடையேறியுள்ளார்.

தனியாக இசை அமைக்க வேண்டும் என்ற ஆசையில் 'இரவு சூரியன்', மற்றும் 'இதயவாசல்' படங்களில் இசை அமைப்பாளராக பணியாற்றினார். இவர் இளையராஜாவிடமிருந்து பிரிந்து சென்றதால் இவருக்கு வாய்ப்பளித்தால் இளையராஜாவின் அபிமானத்தை இழக்க வேண்டியது வரலாம் என்று பயந்தவர்கள் அவரக்கு வாய்ப்பு தரவில்லை. இதனால் மீண்டும் இளையராஜா குழுவில் இணைந்தார். அதன் பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் இளையராஜா குழுவில் பணியாற்றிய போது அவருடன் இணைந்தார். அவரை எப்போதும் ரஹ்மான் 'மாமா' என்றுதான் அழைப்பார். ரஹ்மான் தனி இசை அமைப்பாளராக பணியாற்றியபோது அவரை அழைத்தார். ஆனால் இளையராஜாவை விட்டு வர மறுத்து விட்டார்.

சுமார் 850 பாடல்களுக்கு மறைந்திருந்து உயிர்கொடுத்து விஜி மானுவேல் தனது 64வது வயதில் காலமானார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இனி, அனிருத் வாழ்க்கை மாறப்போகுது: கமல்ஹாசன் சொன்னது ஏன்?இனி, அனிருத் வாழ்க்கை மாறப்போகுது: ... பிளாஷ்பேக்: எம்ஜிஆர், கமல் இணைந்து நடித்த ஒரே படம் பிளாஷ்பேக்: எம்ஜிஆர், கமல் இணைந்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap