பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த லோகேஷ் கனகராஜ் | மேடையில் சூரியைக் கிண்டலடிக்க நினைத்துப் பல்பு வாங்கிய தொகுப்பாளர்கள் | நள்ளிரவில் கைதட்டிப் பாராட்டிய ரஜினி ; சுராஜ் வெஞ்சாரமூடு பெருமிதம் | ஆயுத பூஜை 2026 வெளியீடாக 3 தமிழ்ப் படங்கள் | முதன்முறையாக சிவராஜ்குமாருடன் இணைந்த ரவீனா டாண்டன் | மமிதா பைஜூவின் 'ஹலோ டியர்' ஜனவரி 29ல் வெளியீடு | 'தி டர்ட்டி பிக்சர்' இரண்டாம் பாகம்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு | முதல்வர் விஜய்யை சந்தித்த ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா ஜோடி | கல்கி 2 படப்பிடிப்பில் இணையும் சாய் பல்லவி? | வைலரான நடனம் : லிங்குசாமி விளக்கம் |

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், கார்த்தி, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் செப்டம்பர் 10ம் தேதி தியேட்டர்களில் வெளியான படம் 'சர்தார் 2'. சுமார் 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரானதாக சொல்லப்பட்ட படம் தியேட்டர் வட்டாரங்களில் கடும் அதிர்ச்சியைக் கொடுத்தது. சுமார் 20 கோடி மட்டுமே இந்தப் படம் வசூலித்ததாக சொல்லப்பட்டது.
அப்படத்துடன் வெளியான சூரி நடித்த 'மண்டாடி' படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. கார்த்தி நடித்து இந்த ஆண்டில் வெளிவந்த இரண்டு படங்களான 'வா வாத்தியார், சர்தார் 2' ஆகிய இரண்டுமே தோல்விப் படங்களாக அமைந்தன. 'வா வாத்தியார்' படம் ஓடிடியில் வெளியான போது கூட வரவேற்பைப் பெறவில்லை.
'சர்தார் 2' படம் இந்த வாரம் அக்டோபர் 1ம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்திற்கு ஓடிடி தளத்தில் வரவேற்பு கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.