Advertisement

சிறப்புச்செய்திகள்

ராஷ்மிகா மனைவியாகக் கிடைத்தது நான் செய்த பாக்கியம்! - விஜய் தேவரகொண்டா | அரசியல் மாநாடு போல் நடந்த சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு விழா | டிக்கெட் விற்பனை: முன்னணியில் நானியின் 'தி பாரடைஸ்' | குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டாம் என முடிவு: வரலட்சுமி சரத்குமார் ஓபன் டாக்! | ஜேசன் சஞ்சயை வைத்து படம் இயக்குவது எப்போது? ஓபனாகப் பேசிய இயக்குனர் அட்லி | இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் மறைவு: திரையுலகினர் இரங்கல் | பிளாஷ்பேக்: 'புதுமை இயக்குநர்' ஸ்ரீதரின் இயக்கத்தில் புதிதாக இணைந்த ரஜினிகாந்த் | 3 நிமிட வீடியோ... 20 மணி நேர உழைப்பு... | மண் ராசி கை கொடுக்கும்: 'சேதுபூமி' நடிகை தீபாவின் தில் | வெத்து பந்தா காட்டும் பூ நடிகை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி வாழ்க்கை படமாகுமா... ராகவேந்திரா திருமண மண்டபம் இடிப்பா... : சவுந்தர்யா ரஜினி பேட்டி

01 அக், 2026 - 10:50 IST
எழுத்தின் அளவு:
Will-Rajinis-life-be-made-into-a-film...-Raghavendras-marriage-hall-be-demolished...-Soundarya-Rajini-interview
Advertisement

நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் சவுந்தர்யா லவ் என்ற வெப்சீரிஸ் உருவாக்கி உள்ளார். பாலாஜி மோகன் இயக்க, அர்ஜூன்தாஸ், ஐஸ்வர்ய லட்சுமி நடிக்கிறார்கள். நாளை(அக்., 2) நெட்பிளிக்சில் ரிலீஸாகிறது. அது குறித்தும், பல்வேறு விஷயங்கள் குறித்தும் சவுந்தர்யா அளித்த பேட்டி...

மீண்டும் பட இயக்கம்
ஆறு எபிஷோடுகளாக இந்த வெப்சீரிஸ் வெளியாக உள்ளது. நான் சில ஆண்டுகளாக குடும்பம், குழந்தை என பிஸியாக இருந்ததால் படம் இயக்கவில்லை. வித் லவ் படத்தை தயாரித்தேன். அடுத்து இந்த வெப்சீரிஸ். இப்போது குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள். அடுத்த படத்தை இயக்க கதை தயார் செய்து வருகிறேன். அடுத்த ஆண்டு படம் இயக்குவேன். நான் கோச்சடையான் படத்தை இயக்கினேன். அந்த டெக்னாலாஜியில் இப்போது அட்லி படப்பிடிப்பு நடத்தியது மகிழ்ச்சி. வருங்காலத்தில் நவீன டெக்னாலஜியில் ஒரு அனிமேசன் படம் பண்ண ஆசை.

அப்பா, கமல் படத்தில் பணியாற்ற ஆசை
சினிமா என்பது என் குடும்பம். அப்பாவை வைத்து இப்போது படம் இயக்குவேனா என தெரியவில்லை. அவர் அடுத்தடுத்த படங்களில் பிஸி. கமல் அங்கிள், அப்பா இணையும் படத்தை ஆர்வமாக பார்க்கிறோம். அந்த படத்தில் நான் எதாவது ஒருவகையில் இருப்பேனா என தெரியவில்லை. அதை இயக்குனர் நெல்சன் தான் முடிவு செய்யணும். ஆனால், அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சியை பார்க்க செல்வேன். ஒரே சூரியன், ஒரே சந்திரன், ஒரு சூப்பர்ஸ்டார். அது என் அப்பாதான். ஜெயிலர் 2 பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். முதற்பாகத்தை விட இதில் அப்பா அதிகமாக உழைத்து இருக்கிறார். என் தம்பி அனிருத் இசையும் சிறப்பாக இருக்கும்.

ரஜினி வாழ்க்கை படமாகுமா...
இப்போது தனது வாழ்க்கை வரலாற்றை அப்பா எழுதி வருகிறார். அது முக்கியமான புத்தமாக இருக்கும். அவ்வளவு விஷயங்கள் அதில் இருக்கிறது. நானும் படித்து இருக்கிறேன். விரைவில் அது புத்தகமாக வரும். அடுத்து அதை சினிமாவாக அல்லது வெப்சீரிஸ் ஆக எடுப்பது குறித்து யோசிக்கலாம். சிலர் அப்பா பயோகிராபியில் ரிஷிகாந்த் நடித்தால் நன்றாக இருக்கும் என சொல்கிறார்கள். நான் மொத ராத்திரி படத்தின் சில சீன்கள் பார்த்தேன். அவர் நடிப்பு அருமை. அப்பா மொழிநடையில் அந்த புத்தகம் வந்து மக்களிடம் ரீச் ஆகணும். அப்புறம், அதை சினிமாவாக எடுப்பது குறித்து, நடிகர்கள் குறித்து யோசிக்கலாம்.

ராகவேந்திரா மண்டம் இடிப்பு
எங்கள் குடும்பத்துக்கு சொந்தமான சென்னை, ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபம், கடந்த 36 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அது, சென்னையின் அடையாளங்களில் ஒன்று. காலத்துக்கு ஏற்ப மாற வேண்டும் என அப்பா சொல்வார். இனி, ராகவேந்திரா மண்டபமாக இயங்காது. அந்த இடத்தில் என்ன வரப் போகிறது என்பது குறித்து விரைவில் அறிவிப்போம். காதல் என்பது உலக அளவிலான விஷயம். இரண்டு மாறுபட்ட குணமுள்ள இரண்டு பேர் சந்திக்கும்போது என்ன நடக்கும் என்பதை இந்த வெப்சீரிசில் காண்பித்து இருக்கிறோம். இன்னும் சில மாறுபட்ட காதல்களையும், கேரக்டர்களை இதில் கொண்டு வந்து இருக்கிறோம். ஒரு எபிஷோடு முடியும்போது இந்த ஜோடிக்கு என்ன ஆகும் என்ற ஆர்வம் ஏற்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
யோகிபாபு, சத்யாவின் ‛கோல்டன் பாக்கியம்'யோகிபாபு, சத்யாவின் ‛கோல்டன் ... குறுகிய நாட்களில் ஓடிடி-க்கு வந்த கார்த்தியின் இரண்டு படங்கள் குறுகிய நாட்களில் ஓடிடி-க்கு வந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap