Advertisement

சிறப்புச்செய்திகள்

காலை 6 மணி காட்சி : முதல்வர் விஜய்க்கு தனுஷ் நன்றி | 2026ல் மட்டும் சூர்யாவின் அதிகாரப்பூர்வ வசூல் 840 கோடி | பாலா படத்திற்கு இசையமைக்கும் லிடியன் | ஏதென்ஸில் குடும்பத்தினர் உடன் ரஜினி சென்ற சுற்றுலா போட்டோ வைரல் | விமல் நடிப்பில் சிம்புதேவன் இயக்கும் 'நவோரியா' | நவம்பர் 20ல் மும்முனைப் போட்டி - முன்பதிவில் முந்துவது யார் ? | தென்னிந்திய வசூலில் சாதனை படைத்த 'ராமாயணா' | மதிவதனி, காதம்பரி, பவானி, கோகிலா : நயன்தாரா நடிப்பில் கலக்கிய படங்கள் | ''மீண்டும் பிறந்தாலும்… நீயே வேண்டும்…'' - நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் வாழ்த்து | குடும்பத்தின் மூத்தவர்களுடன் சமந்தா தம்பதிக்கு நடந்த வழிபாட்டு நிகழ்ச்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'டோரதி' எனக்கு கிடைத்த பொக்கிஷம்: கீர்த்தி நெகிழ்ச்சி

01 அக், 2026 - 11:44 IST
எழுத்தின் அளவு:
Dorothy-is-My-Treasure-Keerthy-Resilience
Advertisement


கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்துள்ள படம் டோரதி. பரவலான பாராட்டுகளை பெற்று வரும் இந்த படத்தில் நடித்திருப்பது குறித்து கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

என் இதயத்தின் ஒரு பகுதியை 'டோரதி' எடுத்துக்கொண்டுவிட்டாள். உங்களின் மனதின் ஒரு பகுதியில் நான் இடம்பிடித்திருக்கிறேன் என நம்புகிறேன். டோரதியுடன் என் மீது நம்பிக்கை வைத்து, உங்கள் மனதுக்கு நெருக்கமான உங்களது தொலைநோக்குப் பார்வையில் என்னையும் ஓர் அங்கம் ஆக்கியதற்காக கார்த்திக் சுப்பராஜூக்கு நன்றி. உங்களின் கனவு படத்தில் இடம் பெற்றிருப்பதை என் கனவு போலவே உணர்கிறேன்.

இளையராஜா... நீங்கள் உருவாக்கும் மாயாஜால உலகத்துக்குள் நானும் ஓர் அங்கமாக இருப்பேன் என நான் ஒருநாளும் எண்ணிப் பார்த்தது இல்லை. வாழ்நாள் பொக்கிஷமாக இதைப் போற்றுவேன்.

ரிஷிகாந்த் கார்த்தி மற்றும் சனந்த் சுப்பு, சிலர் மீது சந்தித்த சில நொடிகளில் வாழ்வில் அவர்களுடன் சில அத்தியாயங்களை நாம் கடந்து வந்திருப்பது போன்ற ஒரு பரிச்சயமான உணர்வு ஏற்படுவது மிகவும் அரிது. நான் முன்பே சொன்னது போல், உங்களின் நலம் விரும்பிகளில் நானும் ஒருத்தி. எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன்.

ஒளிப்பதிவாளர் திரு, நீங்கள் என்னுடைய குரு. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். உங்களுடைய பணிகளை எப்போதும் நான் போற்றி வந்திருக்கிறேன். ஆனால், இம்முறை மீண்டும் அதன் மீது காதல் வயப்பட்டுவிட்டேன்.

நான் பெருமை கொள்ளும் ஒரு பயணத்தில் என்னை சிறு பகுதியாக பங்களிக்கச் செய்த இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் படக்குழுவினர், கலைஞர்களுக்கும் நன்றி. இப்படத்தின் உருவாக்கத்தில் இணைந்து பயணித்த அனைவரும் ஒரு சிறு முத்திரையை பதித்துள்ளனர், என் மீது பெரிய முத்திரையை பதித்துள்ளனர்.

இறுதியாக இந்தப் படத்தின் மீது அன்பை பொழியும் எங்களின் ரசிகர்களுக்கு நன்றி. இவ்வாறு நெகிழ்ச்சியுடன் கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
8 வாரங்களுக்கு பிறகுதான் ஓடிடி ரிலீஸ்: விநியோகஸ்தர்கள் சங்கம் தீர்மானம்8 வாரங்களுக்கு பிறகுதான் ஓடிடி ... ரஜினியின்றி நடந்து முடிந்த ஜெயிலர் 2 இசை வெளியீட்டு விழா ரஜினியின்றி நடந்து முடிந்த ஜெயிலர் 2 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap