ராஷ்மிகா மனைவியாகக் கிடைத்தது நான் செய்த பாக்கியம்! - விஜய் தேவரகொண்டா | அரசியல் மாநாடு போல் நடந்த சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு விழா | டிக்கெட் விற்பனை: முன்னணியில் நானியின் 'தி பாரடைஸ்' | குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டாம் என முடிவு: வரலட்சுமி சரத்குமார் ஓபன் டாக்! | ஜேசன் சஞ்சயை வைத்து படம் இயக்குவது எப்போது? ஓபனாகப் பேசிய இயக்குனர் அட்லி | இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் மறைவு: திரையுலகினர் இரங்கல் | பிளாஷ்பேக்: 'புதுமை இயக்குநர்' ஸ்ரீதரின் இயக்கத்தில் புதிதாக இணைந்த ரஜினிகாந்த் | 3 நிமிட வீடியோ... 20 மணி நேர உழைப்பு... | மண் ராசி கை கொடுக்கும்: 'சேதுபூமி' நடிகை தீபாவின் தில் | வெத்து பந்தா காட்டும் பூ நடிகை |
படைப்பாளி என்பவன் யார்? படைப்புத் திறன் என்பது என்ன? என்பதை படவுலகுக்கும், பார்த்து ரசிக்கும் பார்வையாளர்களுக்கும், தனது பல்வேறுபட்ட கலைப் படைப்புகள் மூலம், புதுமுகங்களை வைத்தே புரிய வைத்த புதுமை இயக்குநர்தான் சி வி ஸ்ரீதர். ஜெயலலிதா, ரவிச்சந்திரன், காஞ்சனா, ஸ்ரீகாந்த், வெண்ணிற ஆடை நிர்மலா, வெண்ணிற ஆடை மூர்த்தி, விக்ரம், ஜெயஸ்ரீ போன்ற எண்ணற்ற திரை நட்சத்திரங்கள் எல்லாம் இவரால் வெள்ளித்திரைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர்கள்.
தமிழ் திரையுலகில் முக்கோணக் காதல் கதையின் முன்னோடி என்றாலும், அதுவும் இயக்குநர் சி வி ஸ்ரீதரையே சாரும். கருத்தில் புதுமை, காதலில் புதுமை என்று இவர் தந்த கலைபடைப்புகள் எல்லாம் காலம் கடந்தும் பேசப்பட்டு வரும் காதல் காவியங்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி ஒரு முக்கோணக் காதல் கதையை கையில் எடுத்து, அதை காவியமாக்கி, கலையுலகிற்கு இவர் வழங்கிய ஓர் அழகிய கலைப்படைப்புதான் “இளமை ஊஞ்சலாடுகிறது”.
சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், முத்துராமன், ரவிச்சந்திரன், கல்யாண்குமார், போன்ற அந்நாளைய முன்னணி நாயகர்களை வைத்து படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குநர் ஸ்ரீதர், எம் ஜி ஆரை வைத்து இயக்கிய முதல் திரைப்படம்தான் “உரிமைக்குரல்”. 1974ல் வெளிவந்த இத்திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் எம் ஜி ஆரையே நாயகனாக வைத்து 1977ல் “மீனவ நண்பன்” என்ற திரைப்படத்தை தர, அதுவும் வெற்றி பெற்றிருந்த நிலையில், அவரை வைத்தே தனது மூன்றாவது படைப்பாக “அண்ணா நீ என் தெய்வம்” என்ற திரைப்படத்தையும் உருவாக்கி வந்த வேளையில், அரசியலில் தீவிரம் காட்டி வந்த எம் ஜி ஆர், அப்போது நடந்து முடிந்திருந்த சட்டசபைத் தேர்தலில், அவரது கட்சியான அதிமுக அமோக வெற்றி பெற்றிருந்த நிலையில், தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார் எம் ஜி ஆர். இதன் காரணமாக அதுவரை அவர் நடித்து வந்த ஒரு சில திரைப்படங்கள் மேலும் வளராமல் நின்று போகும் நிலை ஏற்பட்டது. அவற்றில் இயக்குநர் ஸ்ரீதர் இயக்கி வந்த “அண்ணா நீ என் தெய்வம்” திரைப்படமும் அடங்கும்.
எம் ஜி ஆர், சிவாஜிக்குப் பிறகு அடுத்த தலைமுறை நாயகர்களாக தமிழ் திரையுலகில் அப்போது வளர்ந்து வந்து கொண்டிருந்த நம்பிக்கை நாயகர்களான நடிகர் கமல்ஹாசனையும், நடிகர் ரஜினிகாந்தையும் ஒரே திரைப்படத்தில் நடிக்க வைத்து, 1978ம் ஆண்டு, இயக்குநர் ஸ்ரீதர் இயக்கி வெளியிட்ட திரைப்படம்தான் இந்த “இளமை ஊஞ்சலாடுகிறது”. ஆரம்பத்தில் நடிகர் ரஜினிகாந்தின் கதாபாத்திரத்திற்கு இயக்குநர் ஸ்ரீதரின் முதல் தேர்வாக இருந்தவர் மறைந்த நடிகர் ஜெய்கணேஷ்.
மேலும் இயக்குநர் ஸ்ரீதரிடம் அந்நாளில் உதவியாளர்களாக பணிபுரிந்து வந்தவர்கள்தான் பின்னாளில் மிகப் பெரிய இயக்குனர்களாக வளர்ச்சி கண்ட இயக்குநர் பி வாசு மற்றும் இயக்குநர் சந்தானபாரதி. இவ்விருவரும் நடிகர் கமல்ஹாசனும், நடிகர் ரஜினிகாந்தும் இணைந்து இந்தப் படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற தங்களது அபிப்பராயத்தை இயக்குநர் ஸ்ரீதரிடம் கூற, அதன் பின்புதான் இவ்விருவரையும் நடிக்க வைக்க முன் வந்தார் இயக்குநர் ஸ்ரீதர். இதுதான் இயக்குநர் ஸ்ரீதரின் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த முதல் திரைப்படம். 1978ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க, படம் வணிக ரீதியாக வெற்றி பெற்று, திரையரங்குகளில் 175 நாட்கள் வரை ஓடியது.




