காலை 6 மணி காட்சி : முதல்வர் விஜய்க்கு தனுஷ் நன்றி | 2026ல் மட்டும் சூர்யாவின் அதிகாரப்பூர்வ வசூல் 840 கோடி | பாலா படத்திற்கு இசையமைக்கும் லிடியன் | ஏதென்ஸில் குடும்பத்தினர் உடன் ரஜினி சென்ற சுற்றுலா போட்டோ வைரல் | விமல் நடிப்பில் சிம்புதேவன் இயக்கும் 'நவோரியா' | நவம்பர் 20ல் மும்முனைப் போட்டி - முன்பதிவில் முந்துவது யார் ? | தென்னிந்திய வசூலில் சாதனை படைத்த 'ராமாயணா' | மதிவதனி, காதம்பரி, பவானி, கோகிலா : நயன்தாரா நடிப்பில் கலக்கிய படங்கள் | ''மீண்டும் பிறந்தாலும்… நீயே வேண்டும்…'' - நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் வாழ்த்து | குடும்பத்தின் மூத்தவர்களுடன் சமந்தா தம்பதிக்கு நடந்த வழிபாட்டு நிகழ்ச்சி |

தெலுங்கில் ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடித்து இன்று (அக்.,15) வெளியான படம் 'ரணபாலி'. 'கீதா கோவிந்தம், டியர் காம்ரேட்' படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இருவரும் இணைந்து நடிக்கும் படம் என்பதாலும், இருவரும் சமீபத்தில் திருமணம் செய்துக்கொண்டதாலும், ரணபாலி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
இந்த படத்தில் ராஷ்மிகா, 'ஜெயம்மா' கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இக்கதாபாத்திரத்தின் தாக்கத்தால், ஏழைக் குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளார் ராஷ்மிகா. 400 ஏழைக் குடும்பங்களுக்கு மூன்று மாதங்களுக்கு தேவையான மளிகைப் பொருட்களை வழங்கியுள்ளார். அரிசி, கோதுமை மாவு, கேழ்வரகு உள்ளிட்ட 12 வகையான அத்தியாவசியப் பொருட்கள் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும், அடுத்த ஓராண்டுக்கு இந்த உதவித் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ராஷ்மிகா கூறுகையில், ''உதவி செய்வதற்குப் பெரிய தொகையோ, மிகப்பெரிய முயற்சியோ தேவையில்லை. சிறிய உதவிகூட ஒருவரின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். என்னுடைய இந்தச் செயல் மற்றவர்களுக்கும் உதவும் எண்ணத்தை ஏற்படுத்தினால் மகிழ்ச்சி அடைவேன்'' என்றார்.




