பாரதிராஜாவின் கடைசி படமான ‛புலவர்' அக்., 30ல் ரிலீஸ் | வெளியீட்டுக்கு முன்பே திரைக்கதையை புத்தகமாக வெளியிடும் இயக்குனர் | எனது ஹிந்தி உச்சரிப்பை கிண்டல் செய்வது முட்டாள்தனம் : ராஷ்மிகா மந்தனா | சுங்கத்துறை அதிகாரி இயக்கிய படத்தில் நடித்த ராதிகா | ராமாயணத்திலிருந்து நிறைய கற்றுக் கொண்டேன் : ஏ.ஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக் : கைவிடப்பட்ட கணவர் படத்தை மீண்டும் தயாரித்த பூர்ணிமா | பிளாஷ்பேக் : கம்பெனி பெயரை சூட்டிக்கொண்ட நடிகைகள் | பிரபாஸ், பிரசாந்த் நீல் கூட்டணியின் 'சலார் 2' அப்டேட் | ஓடிடி டிரெண்டிங்கில் 'மண்டாடி, என்ன விலை' | இன்று ஒரே படம்தான் ரிலீஸ், தள்ளிப்போன இரண்டு படங்கள் |

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படம் வெற்றி பெற்ற நிலையில் அதையடுத்து மீண்டும் அவர்கள் கூட்டணியில் உருவான இந்தியன்-2 தோல்வி அடைந்து விட்டது. மேலும், இந்தியன்-2 படப்பிடிப்பின்போதே இந்தியன்-3 படத்துக்கான அதிகப்படியான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன.
இந்நிலையில் சமீபத்தில் இந்தியன்-3 விரைவில் திரைக்கு வரவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்ததைத் தொடர்ந்து மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. ஆனால், இப்படத்துக்கு தேவையான மேலும் காட்சிகளைப் படமாக்க 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று இயக்குனர் ஷங்கர் கூறியதாகவும், ஆனால் லைகா நிறுவனம் அந்த கோரிக்கையை நிராகரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே உள்ள காட்சிகளைப் பயன்படுத்தியே இறுதி வடிவத்தைத் தயாரிக்குமாறு தயாரிப்பு நிறுவனம் ஷங்கரிடம் கேட்டுக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாம் பாகம் பாக்ஸ் ஆபீஸில் படுதோல்வி அடைந்ததால், இந்த மூன்றாவது பாகத்தில் மேலும் முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று தயாரிப்பாளர்கள் இயக்குனர் ஷங்கரிடத்தில் கூறி வருகிறார்களாம். ஆனால் அவரோ, 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்தாமல் இறுதிக்கட்ட பணிகள் நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை என்று வாதம் செய்து வருகிறாராம். இதனால் இந்தியன்-3 பட வேலைகள் அடுத்தக்கட்டத்துக்கு நகராமல் நிற்பதாக தெரியவந்துள்ளது.




