Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தீபாவளிக்கு சிம்பு படங்களின் 'அப்டேட்'

30 அக், 2026 - 06:05 IST
எழுத்தின் அளவு:
Simbu-Films-Updatefor-Diwali
Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிலம்பரசன் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் 'அரசன்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் பற்றி அவ்வப்போது ஏதாவது ஒரு வதந்தி பரவுவதும், அதன்பின் அதற்குரிய விளக்கத்தை படக்குழு கொடுப்பதுமாக படம் ஆரம்பமானதிலிருந்து போய்க் கொண்டிருக்கிறது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஆரம்பமான படப்பிடிப்பு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த வருடத்தில் இப்படத்தை வெளியிட முதலில் திட்டமிட்டிருந்ததாகச் சொன்னார்கள். தற்போதுள்ள நிலையில் அடுத்த வருடம்தான் இப்படம் வெளியாகும் எனத் தெரிகிறது.

இதனிடையே, 'அரசன்' படத்தின் எதிர்பார்ப்பில் உள்ள ரசிகர்களைத் திருப்திப்படுத்த ஒரு வீடியோவை தீபாவளியை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.

அது மட்டுமல்லாது சிம்பு அடுத்த நடிக்க உள்ள படத்தின் அறிவிப்பும் வெளியாகும் என்கிறார்கள். சிம்புவின் 49வது படமாக 'பார்க்கிங்' இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு கடந்த வருடம் வெளிவந்தது. ஆனால், அதன் படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை.

'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 50வது படத்தின் அறிவிப்பும், ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் 'தர்மன்' படத்தின் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்புவின் 51வது படத்தின் அறிவிப்பும் வெளியாகி இருந்தது.

தீபாவளிக்கு வெளிவர உள்ள சிம்புவின் புதிய பட அறிவிப்பில் இந்தப் படங்களின் அப்டேட் இருக்குமா அல்லது வேறொரு இயக்குனரின் படமா என்பது அறிவிப்பு வரும் போது தெரிய வரும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தென்னிந்திய  சினிமாவை சாடும் ராதிகா ஆப்தேதென்னிந்திய சினிமாவை சாடும் ராதிகா ... தீபாவளியை முன்னிட்டு நேரடியாக ஓடிடியில் வெளியாகும் சசி படம் தீபாவளியை முன்னிட்டு நேரடியாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap