கனவு நனவான தருணம் : மிர்னா மேனன் | கீர்த்தி சுரேஷ் - மிஷ்கினின் ‛சத்தியவான் சாவித்திரி' டிரைலர் வெளியானது | பிரித்விராஜ்-கரீனா கபூரின் தாயரா ஓடிடியில் வெளியானது | மைக்ரோ டிராமா தளத்தை தொடங்கும் அமீர்கான் | ஒரே ஆண்டில் இரண்டு 1000 கோடி படங்கள் : இது 5வது முறை | உடல் எடையைக் குறைத்த கீரவாணி : அனுபம் கேர் பாராட்டு | 'ஜெயில் மேட்ஸ்' ஆக மாறிய 'ரோஜா மல்லி கனகாம்பரம்' | தமிழில் அடுத்தடுத்த எதிர்பார்ப்பில் சாய் பல்லவி | பாடகி ஸ்ரீநிஷா காதல் திருமணம்: பாடகர் சாம் விஷாலை மணக்கிறார் | சினிமா ஆகிறது சோனியாவின் சுயசரிதை |

நடிகர் மம்முட்டி கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் 'ஓம் சாப்டர் 1' என்கிற படத்தில் நடித்துள்ளார். தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். கதாநாயகியாக சாய் பல்லவி மற்றும் ஸ்ரீ லீலா ஆகியோர் நடித்துள்ளனர். வரும் நவம்பர் 20ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மம்முட்டி பேசும்போது, “நான் ஏற்கனவே ரஜினி சாருடன் 'தளபதி' படத்தில் நடித்து விட்டேன். தனுஷ் படத்திலும் இதோ 'ஓம்' படத்தில் நடித்து முடித்து விட்டேன். இப்போது தனுஷின் மகன் இங்கே உட்கார்ந்திருக்கிறான். அவன் எப்போது நடிக்க வரப் போகிறான் என்று எனக்கு தெரியவில்லை” என நகைச்சுவையாக கூறியது அரங்கில் அமர்ந்தவர்களை சிரிக்க வைத்தது.
அதே சமயம் அப்படி ரஜினியின் பேரனும் நடிக்க வந்து அவருடன் மம்முட்டியும் இணைந்து நடித்து விட்டால் நிச்சயமாக ஒரே வீட்டில் உள்ள மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்த ஒரு தனித்துவமான சாதனையாக அது அமையும் என்பது சந்தேகம் இல்லை.