பிரபல இயக்குனரின் பேத்தியை மணந்தார் நடிகர் அஸ்வின் குமார் | பெண் போராளியாக நடிக்கும் இனியா | பிளாஷ்பேக் : 'அண்ணாமலை'யை இயக்கிய 3வது இயக்குநர் | பிளாஷ்பேக் : 8 ஆயிரம் அடி நீக்கப்பட்ட 'பச்சை விளக்கு' | சர்வதே பதுக்கல் பின்னணியில் உருவாகும் 'சிவப்பு நட்த்திரம்' | மீண்டும் அம்மா ஆகிறார் 'மைனா' நந்தினி | மிஷ்கினுக்கும் எனக்கும் அப்பா - மகள் உறவு : கீர்த்தி சுரேஷ் கோபம் | இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பாரதிராஜா, பாக்யராஜிற்கு அஞ்சலி | ராதிகா ஆப்தே சர்ச்சை குறித்து மவுனம் கலைத்த கீர்த்தி சுரேஷ்! | பேசும் மற்றும் கேட்கும் திறனை மீட்டுத் தந்த மம்முட்டி : நெகிழ வைத்த குழந்தைகள் சந்திப்பு |

கண்ணன் ரவி குழுமம் சார்பில் கண்ணன் ரவி தயாரிக்கும் படத்திற்கு 'செங்குலம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. அறிமுக இயக்குநர் சின்னசாமி பொன்னையா திரைக்கதை மற்றும் வசனம் எழுதி இயக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கிப்ட்சன் ராபர்ட் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, பொள்ளாச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், காஷ்மீரிலும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் 2027-ம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில் கரிசல் காட்டின் மண்ணில் ஒரு சிவப்பு நிற வளையல் வைக்கப்பட்டிருக்கிறது. அப்போது ரத்தம் தோய்ந்த வேல்கம்பு ஒன்று வேகமாகப் பாய்ந்து வந்து அந்த வளையலைத் தாக்கி உடைத்துச் சிதறடிக்கிறது. அதைத் தொடர்ந்து, அந்தச் சிதறல்களுக்கு மத்தியில் 'செங்குலம்' என்ற படத்தின் தலைப்பு வெடித்துத் தோன்றுகிறது.




