சிரஞ்சீவியுடன் தெலுங்கில் சிறப்புப் பாடலுக்கு நடனமாடிய ரித்திகா சிங்! | ஜிவி பிரகாஷின் 'அன்புடன் மகி' | ரூட்டை மாற்றிய பீஸ்ட் நடிகை... அல்லாடும் கோலிவுட் ஹீரோக்கள் | 'டிராகன்' படத்தை அடுத்து 2 படங்களில் நடிக்கும் ஜூனியர் என்டிஆர்! | 'வாரணாசி' புதிய அப்டேட்: மகேஷ் பாபு -ராஜமவுலி ரசிகர்களுக்கு ஆச்சரிய தகவல்! | 'ராக்கா' படம் குறித்து மனம் திறந்த அல்லு அர்ஜூன்! ரசிகர்களிடம் கூறியது என்ன? | பிளாஷ்பேக்: நடிகர் விஜய் நடிக்க இயலாமல் போன இயக்குநர் லிங்குசாமியின் திரைப்படங்கள் | 'கராத்தே பாபு' - சான்றிதழ் வழங்கிய ரிவைசிங் கமிட்டி ? | வட அமெரிக்காவில் 225 கோடி வசூல் கடந்த 'ராமாயணா' | தலைமுடி வெட்டியதால் அம்மா ஷாக் ஆகிட்டாங்க : சாய் பல்லவி |

அமரன் படத்தை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அடுத்ததாக தனுஷ், மம்முட்டி நடிப்பில் உருவாகியுள்ள ஓம் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. ராஜ்குமார் பெரியசாமியை பொருத்தவரை விஜய்யின் தீவிரமான ரசிகர். ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த போது படப்பிடிப்பு தளத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார் என நடிகை சாய் பல்லவியே சமீபத்தில் கூறியுள்ளார். அந்த அளவுக்கு விஜய் மீது பற்று கொண்டவர் ராஜ்குமார் பெரியசாமி.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், "கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஜய்யின் வில்லு படம் வெளியான சமயத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் திடீரென டென்ஷனாகி எல்லோரையும் அமைதியாக இருக்கும்படி சத்தமாக பேசினார். அப்போது அது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அமைதியான குணம் கொண்ட விஜய் ஏன் இப்படி பேசினார் என கேள்வியை உருவாக்கினாலும் அப்போது தொடர் தோல்விகளை சந்தித்து வந்ததால் அந்த அழுத்தத்தில் இருந்த விஜய் வில்லு படத்தின் தோல்வியால் இந்த மாதிரி பேசினார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அது உண்மை அல்ல..
அந்த நிகழ்ச்சி ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. அந்த மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வு முடிவடைந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் தான் மண்டப ஊழியர்கள் அரங்கில் இருந்த இரும்பு டேபிள்களையும் நாற்காலிகளையும் நகர்த்தி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சத்தமான ஓசை தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவதற்கு இடையூறாக இருந்ததால் தான் ஒரு கட்டத்தில் விஜய் டென்ஷனாகி 'பேசிகிட்டு இருக்கேன்ல.. சைலன்ஸ்' என்று கொஞ்சம் கோபமாக கூறினார். மற்றபடி அவர் தனது படங்களின் தோல்வியாலோ அல்லது அது கொடுத்த மன அழுத்தத்தாலோ அப்படி பேசவில்லை" என்று தற்போது விளக்கம் அளித்துள்ளார் ராஜ்குமார் பெரியசாமி.