ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் | 2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் | ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புகையிலை விளம்பரத்திற்கு ரூ.40 கோடி: தைரியமாக மறுத்த சுனில் ஷெட்டி | ‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் | 2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் |

2000ம் ஆண்டு காதல் ரோஜாவே படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் பூஜா குமார். இவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே பல ஹாலிவுட் படங்களில் நடித்தவர். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்தவர், சிறிய இடைவெளிக்குப் பின்னர் கமலின் விஸ்வரூபம் படம் மூலம் மீண்டும் தமிழில் நடிக்கத் தொடங்கினார். அதை தொடர்ந்து அவர் மீன் குழம்பும் மண் பானையும், விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்தார். கடந்த 20 வருடங்களாக பல்வேறு இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வரும் பூஜா குமார், மிஸ் இந்தியா யுஎஸ்ஏ பட்டம் பெற்றவர்.
தொழிலதிபர் விஷால் ஜோஷி என்பவருடன் பூஜா குமார் வாழ்ந்து வருவதாக நீண்டகாலமாக இணையத்தில் ஒரு தகவல் பரவி வந்தது. ஆனால் இது பற்றி பூஜா குமாரோ அல்லது விஷால் ஜோஷியோ வாய் திறக்காமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில், விஷால் ஜோஷி தனது சமூகவலைதளப் பக்கத்தில் நடிகை பூஜாகுமாரோடு இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் தங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இருப்பதாகவும் அந்தக் குழந்தைக்கு நாவ்யா எனப் பெயரிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
பூஜா குமாரின் இந்த ரகசிய திருமணம் மற்றும் குழந்தை பற்றிய தகவல்களால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம் சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் பூஜா, இதுப்பற்றி எந்த ஒரு பதிவும் போடாமல் உள்ளார்.




