5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
நடிகர் அர்ஜூனின் சகோதரி மகன் துருவ் சார்ஜா. சமீபத்தில் மறைந்த சிரஞ்சீவி சார்ஜாவின் தம்பி. தற்போது கன்னடத்தில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர். ஆதுரி, பகதூர், பஜாரி, பிரேம பராஹா படங்களில் நடித்துள்ள துருவ் சர்ஜா தற்போது நடித்துள்ள படம் பொகரு. பெரிய பட்ஜெட்டில் தயாராகி உள்ள ஆக்ஷன் படம். கன்னடம், தெலுங்கில் தயாராகி உள்ள இந்த படம் தமிழில் செம திமிரு என்ற பெயரில் வெளிவருகிறது.
இதில் துருவ் சார்ஜாவுடன் ராஷ்மிகா மந்தனா, பவித்ரா லோகேஷ், ரவிசங்கர், சம்பத், தனஞ்செய் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சந்தன் ஷெட்டி இசை அமைத்திருக்கிறார். ஸ்ரீஜெகத்குரு மூவீஸ் தயாரித்துள்ளது. நந்த கிஷோர் இயக்கி உள்ளார்.
தாய் மகனுக்கு இடையிலான பாசத்தையும், தாதாக்களின் மோதலையும் மையமாக கொண்ட படம். வருகிற பிப்ரவரி 19ந் தேதி கன்னடம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் ஒரே நேரத்தில் வெளிவருகிறது.