இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
கருப்பு, வெள்ளையில் இருந்த சினிமாவை உயர்தர வண்ணத்திரையாக மாற்றியவர்களில் முக்கியமானவர்கள் அசோக்குமாரும், நிவாசும். அசோக்குமார் ஆந்திராவில் இருந்து வந்தவர். நிவாஸ் கேரளாவில் இருந்து வந்தவர். இருவருமே பிலிம் இன்ஸ்ட்டிடியூட்டில் படித்து சினிமாவுக்கு வந்தவர்கள்.
பாரதிராஜாவின் ஆரம்பகால வெற்றிக்கு பெரிதும் துணை நின்றவர் நிவாஸ். 16 வயதினிலே, கிழக்கே போகும் ரெயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள் ஆகிய படங்களை வண்ணமயமாக கொடுத்து படங்களின் வெற்றிக்கு துணை நின்றவர். ரஜினி நடித்த தனிக்காட்டு ராஜா, கமல் நடித்த சலங்கைஒலி உள்ளிட்ட பல வெள்ளி விழா படங்களில் ஒளிப்பதிவாளராகவும் இருந்தார். மலையாளத்தில் வெளிவந்த மோகினியாட்டம் படத்திற்காக தேசிய விருதும் பெற்றார்.
பாரதிராஜா நடித்த கல்லுக்குள் ஈரம், எனக்காக காத்திரு, நிழல் தேடும் நெஞ்சங்கள், செவ்வந்தி ஆகிய படங்களை இயக்கினார். பாலிவுட் படங்களையும் சேர்த்து 60க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள நிவாஸ், முதுமை காரணமாக சினிமாவில் இருந்து விலகி தனது சொந்த ஊரான கோழிக்கோட்டில் குடும்பத்னருடன் வசித்து வந்தார்.
80 வயதான நிவாஸ் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் இன்றி நேற்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு மலையாள திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.