தயாரிப்பாளரிடம் கெஞ்சிய நாயகி | வெற்றி இயக்குனருக்கு ஷாக் கொடுத்த நடிகர் | பிளாஷ்பேக்: எம்ஜிஆர் நடிக்க இருந்த கதையில் நடிகர் ரஜினிகாந்த் | அதிக சம்பளம் பெறும் நடிகர் கமல்ஹாசன்? | 'வொர்த், வொர்த், வொர்த்' - பார்த்திபனின் மகளிர் தின வாழ்த்து | 'காந்தாரா' நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்த சிவராஜ்குமார் | 'உஸ்தாத் பகத்சிங்' படத்திற்கு சம்பளத்தை கணிசமாக குறைத்த பவன் கல்யாண் | நம் நாடு, நாடோடிகள், அமரன் - ஞாயிறு திரைப்படங்கள் | ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் |

வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்த அசுரன் படத்தின் மெகா ஹிட்டுக்குப்பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜெகமே தந்திரம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் போன்ற படங்களில் நடித்துள்ளார் தனுஷ். அதை யடுத்து பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடிப்பவர், தனது அண்ணன் செல்வராகவனின் நானே வருவேன் படத்திலும் நடிக்கப்போகிறார்.
இப்படியான நிலையில், இந்த படங்களைத் தொடர்ந்து மீண்டும் பாலாஜிமோகன் இயக்கத்தில் ஒரு படத்தில் தனுஷ் நடிக்கப்போவதாக தகவல் தனுஷ். இவர் இயக்கத்தில் ஏற்கனவே நடித்த மாரி, தனுசுக்கு பிடித்தமான படம். அதனால்தான் மாரி-2வில் நடித்தார். ஆனால் அந்த படம் ஓடவில்லை. ஆனபோதிலும் தற்போது பாலாஜிமோகன் சொன்ன ஒரு கதை பிடித்து விட மீண்டும் அவருக்கு கால்சீட் கொடுத்திருக்கிறாராம் தனுஷ். ஆனால் இப்படம் மாரி-3 படமா? இல்லை வேறு படமா? என்பது தெரியவில்லை.




