‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

கொரோனா தாக்கம் கடந்த சில நாட்களாக ஒரு சில மாநிலங்களில் மீண்டும் அதிகரித்துள்ளது. சில மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். அந்த விதத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற உத்தரவை மீண்டும் பிறப்பித்துள்ளார்கள். மேலும், மாஸ்க் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஒரு மாநிலத்தில் ஒரு விஷயம் ஆரம்பிக்கப்பட்டால் அதை மற்ற சில மாநிலங்களும் பயன்படுத்த ஆரம்பிக்கும். அந்த விதத்தில் மகாராஷ்டிர மாநில அரசின் உத்தரவை அடுத்து தமிழ்நாட்டிலும் அது போன்ற உத்தரவு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டிலும் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளை மூட வேண்டும் என சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். ஏற்கெனவே தமிழ்நாட்டில் தியேட்டர்களுக்கு மக்கள் வருவதேயில்லை. இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கும் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கை அமல்படுத்தபடும் ஒரு சூழல் உருவாகி வருகிறது என்றே சொல்கிறார்கள்.