‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

தெலுங்குத் திரையுலகில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகராகவும், பிரபலமானவராகவும் வளர்ந்தவர் விஜய் தேவரகொண்டா. 'அர்ஜுன் ரெட்டி' என்ற ஒரே ஒரு படம் அவரை உச்சத்துக் கொண்டு சென்றது.
தெலங்கானா மாநிலத்தில் தனது சொந்த ஊரான மெகபூப் நகரில் புதிதாக மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றைத் திறக்க உள்ளார் விஜய். ஏற்கெனவே சொந்தமாக 'ரவுடி வேர்' என்ற ஆடை கம்பெனியையும், கிங் ஆப் த ஹில் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்துள்ள விஜய், அடுத்த பிஸினஸ் ஆக இந்த தியேட்டர் பிஸினஸ் இடம் பெறுகிறது.
பிரபல ஏசியன் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து எவிடி, அதாவது ஏசியன் விஜய் தேவரகொண்டா சினிமாஸ் என்ற பெயரில் முதல் மல்டிபிளக்ஸ வளாகம் மெகபூப் நகரில் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது. பவன் கல்யாண் நடித்து வெளிவர உள்ள 'வக்கீல் சாப்' படம் தான் முதன் முதலாகத் திரையிடப்பட உள்ளது.
ஏற்கெனவே ஏசியன் சினிமாஸ் நிறுவனம், ஐதராபாத்தில் எஎம்பி சினிமாஸ் என்ற பெயரில் நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து பெரிய மல்டிபிளக்ஸ தியேட்டரைத் திறந்து நடத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் எந்த ஒரு நடிகரும் சொந்தமாக இன்னும் தியேட்டர்களை ஆரம்பிக்கவில்லை. ஆனால், சொந்தப் பட நிறுவனங்களை வைத்திருக்கிறார்கள்.