15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கதை நாயகனாக நடிக்கும் மிஷ்கின் | ஹீரோவானார் பிக்பாஸ் விக்ரமன் | தமிழ் படத்தில் வில்லனாக நடிக்கும் சிராக் ஜானி | பிளாஷ்பேக் : சிவாஜி பட ரீமேக்கில் கமல் | பிளாஷ்பேக் : பானுமதிக்கு ஜோடியாக நடித்த தங்கவேலு | விஜய் பிரியா விடை கொடுப்பாரா?, பிரிவு உபசார விழா நடக்குமா? | விஜயை விமர்சித்த நடிகையின் அனலி பட ரிசல்ட்? | சூரி படத்தின் பட்ஜெட் 75 கோடியா? | பத்து கோடியை தொட்ட சிறை | ஜனநாயகன் டிக்கெட் புக்கிங் எப்போது தெரியுமா? |

இசை அமைப்பாளராக இருந்து நடிகரான விஜய் ஆண்டனி நடித்து முடித்துள்ள தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி, கோடியில் ஒருவன் படங்கள் வெளிவர வேண்டியது இருக்கிறது. அடுத்ததாக பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கிறார். இதனை கோடியில் ஒருவன் படத்தை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார்.
இதற்கிடையில் எந்த அறிவிப்பும் இல்லாமல் சத்தமே இல்லாமல் ஒரு படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இதனை 8 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து பரவலான பாராட்டுகளை பெற்ற விடியும் முன் படத்தின் இயக்குனர் பாலாஜி கே.குமார் இயக்குகிறார்.
விடியும் முன் படத்தில் பூஜா நடித்திருந்தார். ஒரு குழந்தையை காப்பாற்ற ஒரு இரவில் போராடும் ஒரு பாலியல் தொழிலாளியின் கதை, விடியும் முன். தற்போது பாலாஜி குமார் இயக்கி வரும் படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக இறுதிசுற்று ரித்திகாசிங் நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்புகள் சென்னையை சுற்றி நடந்து வருகிறது. 25 நாளில் படத்தை முடிக்க திட்டமிட்டு ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படம் ஓடிடி தளத்திற்காக தயாரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில நாளில் படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.