ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஆர்யாவின் மணப்பெண்ணாக தேர்வாகி கடைசி நேரத்தில் கழற்றி விடப்பட்டவர் அபர்ணதி. தற்போது வசந்தபாலன் இயக்கி உள்ள ஜெயில் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். அந்த படம் இன்னும் வெளிவரவில்லை. ஆனால் அதன் பிறகு நடித்த தேன் படம் வெளியாகி. அவரது நடிப்பு பாராட்டுகளை பெற்று வருகிறது.
இதுகுறித்து அபர்ணதி கூறியதாவது: தேன் படத்திற்கு கிடைத்து வரும் பாராட்டுக்கள் மகிழ்ச்சியை தந்துள்ளது. அனைத்து பாராட்டுக்களும் இயக்குநர் கணேஷ் விநாயகன் மற்றும் ஒளிப்பதிவாளர் சுகுமாரனையே சேரும். இந்த கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்ய முழுக்காரணமும் அவர்கள் தான்.
மலைப்பகுதியில் வாழும் பெண்ணை தத்ரூபமாக பிரதிபலிக்கும் பொருட்டு, படத்தின் போது ஷாம்பு, மேக்கப் என எதையும் பயன்படுத்த வேண்டாம் என்று அவர்கள் தான் பரிந்துரைத்தார்கள். மலைப்பகுதியில் இருந்த போது நான் அந்த பகுதி பெண் போலவே மாறினேன். நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் சவாலான பாத்திரம் கிடைத்தது பெரும் மகிழ்ச்சி. படம் உலகம் முழுக்க நிறைய திரைவிழாக்களில் கலந்துகொண்டு 48 விருதுகள் வரை வென்றுள்ளது. திரையரங்கில் படம் பார்த்தவர்களும் விமர்சகர்களும் என் நடிப்பை குறிப்பிட்டு பாராட்டி தேசிய விருது கிடைக்கும் என கூறியிருப்பது பெரும் ஆசிர்வாதம். அதில் நானும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். என்றார் அபர்ணதி.